மிஷ்கினுக்காக சைக்கோவாக மாறும் உதயநிதி ஸ்டாலின்

மிஷ்கினின் அடுத்த படம் சைக்கோ என பெயரிடப்பட்டுள்ளது

சென்னை: மிஷ்கினின் அடுத்த படத்திற்கு சைக்கோ என பெயரிட்டுள்ளார்.

புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குனர் அகிரா குரசோவாவின் தீவிர அபிமானி இயக்குனர் மிஷ்கின். தன்னுடைய திரையாடல் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முயற்சிப்பவர்.

Mysskin next is Psycho!

மிஷ்கினின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன், சவரக்கத்தி ஆகிய படங்கள் நன்கு பேசப்பட்டன. அடுத்ததாக ஷாந்தனுவை கதாநாயகனாக வைத்து இயக்குவதாக இருந்த திரைப்படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது.

தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார். காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் நடித்துள்ள அதிதி ராவ் ஹைதரி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு மிஷ்கின் சைக்கோ என பெயரிட்டுள்ளார்.

1960 ஆம் ஆண்டு ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் இயக்கத்தில் வெளியான ஹாலிவுட் திரைப்படமான சைக்கோவின் பெயரை மிஷ்கின் இப்படத்திற்கு வைத்துள்ளார். அப்படத்திற்கு பிறகு சைக்கோ என்ற பெயரில் நிறைய ஆங்கில படங்கள் வந்துவிட்டன. ஷெர்லாக் ஹோம்ஸின் தமிழ் வடிவமாக துப்பறிவாளன் படத்தை இயக்கியதுபோல் சைக்கோவின் தமிழ் வடிவமாக இப்படத்தை இயக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசையமைக்கிறார். முதல்முறையாக உதயநிதியும், அதிதி ராவ் ஹைதரியும் இணைகின்றனர். இம்மாத இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X