இளையராஜா அப்பானு கூப்பிட்ட மிஷ்கின்.. நீ எனக்கா பிறந்தனு ஆஃப் செய்த இசைஞானி.. கடுப்பாயிட்டாரு போல
சென்னை: இயக்குநர் மிஷ்கின் கோலிவுட்டின் தனித்துவமான இயக்குநர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். அவர் இளையராஜாவின் தீவிரமான ரசிகர். ராஜாவை அப்பா அப்பா என்று வாஞ்சையோடு அழைக்கும் மிஷ்கின்; இசைஞானி இசையில் நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சைக்கோ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். இந்நிலையில் அவர் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சித்திரம் பேசுதடி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான மிஷ்கின்; இயக்கும் ஒவ்வொரு படமும் வேறு வேறு ஜானரில் இருக்கக்கூடியது. அஞ்சாதே, யுத்தம் செய், நந்தலாலா, சைக்கோ, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் உள்ளிட்ட படங்கள் காலம் கடந்து கொண்டாடப்படுகின்றன. அவரது திரை மொழியே புதுமையாக இருக்கிறது என்றும்; உலக சினிமா ரேஞ்சுக்கு தமிழ் சினிமாவை அணுகுவார் என்றும் அவரின் ரசிகர்க சொல்வதுண்டு.
நடிகராக மிஷ்கின்: தொடர்ந்து இயக்கத்தில் கவனம் செலுத்தி வந்த அவர்; இடையில் நடிப்பதற்கும் சென்றுவிட்டார். அப்படி அவர் லியோ, மாவீரன், வணங்கான், டிராகன் என வரிசையாக நடித்து அதிலும் தனது திறமையை நிரூபித்தார். அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் லீடு ரோலில் நடிக்கும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி வேற்று மொழிகளிலும் நடிக்க கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது.

மிஷ்கினின் ட்ரெய்ன்: நடிப்பு மட்டுமின்றி சின்னத்திரையில் நடக்கும் ரியாலிட்டி ஷோவில் நடுவராகவும் பங்கேற்றிருக்கிறார். இது தவிர்த்து விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசனை உள்ளிட்டோரை வைத்து ட்ரெய்ன் படத்தையும் இயக்கி முடித்திருக்கிறார். அதனை கலைப்புலி தாணு தயாரித்திருக்கிறார். மிக விரைவில் படம் வெளியாகவிருக்கின்றது. இப்படமும் அவரது ஸ்டைலில் அமைந்து ஹிட்டாகும் என்றும் ரசிகர்கள் நம்பியிருக்கிறார்கள்.
இளையராஜாவின் ரசிகர்: இதற்கிடையே இசைஞானி இளையராஜாவின் தீவிரமான ரசிகர் மிஷ்கின். நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சைக்கோ ஆகிய படங்களை அவர் ராஜாவின் இசையில் இயக்கியிருக்கிறார். ரசிகர் மட்டுமின்றி இளையராஜாவை அப்பா என்றுதான் அழைப்பார். இந்நிலையில் அவர் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், "இளையராஜாவை நான் அப்பா என்றுதான் கூப்பிடுவேன். ஒருநாள் பாடல் தொடர்பாக எங்கள் இரண்டு பேருக்கும் சண்டை போய்க்கொண்டே இருந்தது.
நீ எனக்கா பிறந்த?: அவரும் சண்டை போட்டுக்கொண்டே இருந்தார். நான் அப்பா அப்பானு சொல்லி சண்டை போட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிட்டு, 'என்னை அப்பானு கூப்பிடாத.. நீ என்ன எனக்கா பிறந்தனு கேட்டுட்டாரு. நான் ஒரு மணி நேரம் அங்கேயே நின்று உடைந்து அழுதேன். ரொம்ப அழுதது அன்றைக்குத்தான்" என்றார்.


Click it and Unblock the Notifications











