Mysskin Poorna: "என் உடம்பு அப்படி இருக்க அது தான் காரணம்..” மிஷ்கினின் ஃபேவரைட் நாயகி ஓபன்!
சென்னை: விதார்த், பூர்ணா நடித்துள்ள டெவில் திரைப்படம் பிப். 2ம் தேதி ரிலீஸாகிறது. மிஷ்கின் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அதில் பூர்ணாவின் வயிற்றில் நான் குழந்தையாக பிறக்க வேண்டும் என மிஷ்கின் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகை பூர்ணாவும் தனது உடல் பருமன் குறித்து பேசியது வைரலாகி வருகிறது.
அதனால தான் என் உடம்பு அப்படி இருக்கு
முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூர்ணா. அதற்கு முன்பாக மலையாளம், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்திருந்தார். தமிழிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த பூர்ணா சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாய் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில், பொங்கலுக்கு தெலுங்கில் வெளியான குண்டூர் காரம் படத்தில் மகேஷ் பாபுவுடன் ஒரு பாடலில் ஆட்டம் போட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து பூர்ணா நடித்துள்ள டெவில் திரைப்படம் பிப்ரவரி 2ம் தேதி வெளியாகிறது. ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு இயக்குநர் மிஷ்கின் இசையமைத்துள்ளார். டெவில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின், பூர்ணா நல்ல திறமையான நடிகை என பாராட்டினார்.
அதோடு நிற்காமல் அடுத்த ஜென்மத்தில் பூர்ணாவின் வயிற்றில் குழந்தையாக பிறக்க வேண்டும் எனவும் மிஷ்கின் கூறினார். அவரது இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில், பூர்ணா தனது உடல் பருமன் குறித்து ஓபனாக பேசியுள்ளார். அதில், நான் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருக்க காரணம் மிஸ்கின் சார் தான். அவர் கொடுத்த தன்னம்பிக்கையில் தான் என்னுடைய கேரியர் உருவானது. ஒல்லியாக இருந்தாலும், குண்டாக இருந்தாலும் நடிப்பதை விட்டு விடாதே. நாயகியாக மட்டும் நடிக்காமல் நல்ல கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என புரிய வைத்தார்.
மிஷ்கின் மட்டும் இல்லாமல் அவரது தம்பியும் டெவில் படத்தின் இயக்குநருமான ஆதித்யாவும் எனக்கு அண்ணன் மாதிரி தான். டெவில் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதுதான் எனக்கு திருமணம் நடந்தது, க்ளைமேக்ஸ் ஷூட் செய்யும் போது 7 மாதம் கர்ப்பமாக இருந்தேன். அதனால் எனது கால்ஷீட்டில் பிரச்சினை வந்தபோது மற்ற நடிகர்களும் அட்ஜெஸ்ட் செய்துகொண்டதாக பூர்ணா நெகிழ்ச்சியாக பேசினார்.
குண்டூர் காரம் படத்தில் ஒரெயொரு பாடலுக்கு நடனம் ஆட சென்ற போதும் உடல் பருமன் குறித்து பயம் இருந்தது. ஆனால் இயக்குநர் த்ரிவிக்ரம் எந்த ட்ரெஸ் வேண்டுமானாலும் போட்டு டான்ஸ் ஆடுங்கள் என சொன்னதால் தான் அதில் நடித்துக் கொடுத்தேன். நான் இப்போ ஒரு குழந்தைக்கு அம்மா, அதனால் என் உடம்பு அப்படித்தான் இருக்கும். அதெல்லாம் எதுவும் புரியாமல் நெட்டிசன்கள் சிலர் எனது புகைப்படங்களில் உடல் பருமன் குறித்து கமெண்ட் செய்கிறார்கள். இது எல்லா நடிகைகளுக்கும் நடக்கும் விஷயம் தான், ஆனாலும் தொடர்ந்து நடிப்பேன் என பூர்ணா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











