சச்சின் படத்தை பார்த்து மிஷ்கின் ரியாக்ஷன்.. விஜய்க்கு சின்ன விண்ணப்பம்.. அது நடக்க கூடாதாம்!
சென்னை: விஜய் நடிப்பில் கடந்த 2005இல் வெளியான சச்சின் திரைப்படம் 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் இந்த வேளையில் ஒரு மகிழ்ச்சியான செய்தியும் வந்துள்ளது. இப்படம் இன்று தமிழகம் முழுவதும் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்நிலையில், நேற்று சச்சின் படத்தின் பிரிமீயர் ஷோவை பார்த்த பிரபல இயக்குநர் விஜயை புகழ்ந்து பாராட்டியிருக்கிறார். விஜய்யின் அரசியல் என்ட்ரியால் சினிமாவுக்கு வறட்சி ஏற்படும் என்று தெரிவித்திருப்பதால் அவரது ரசிகர்கள் கண்ணீர் விட்டுள்ளனர்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவான சச்சின் திரைப்படம் 2005ல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. தற்போது தமிழ் சினிமாவில் ரீ ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்துள்ள நிலையில், சச்சின் படத்தையும் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார். அதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்றது. டிஜிட்டல் தரத்தில் 4 கே வடிவில் திரையரங்குகளில் சச்சின் படம் இன்று ரிலீஸ் ஆகிறது. ரிலீஸ் ஆவதற்கு முன்பே இப்படத்திற்கான டிக்கெட் புக்கிங்கில் ரூ.1.5 கோடியை எட்டியிருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. குட் பேட் அக்லி திரைப்படம் வசூல் சாத்னை படத்திருக்கும் இந்த நேரத்தில் சச்சின் ரீ ரிலீஸ் விஜய் ரசிகர்களுக்கு குதூகலமான செய்தியாக மாறியிருக்கிறது.

விஜய் அரசியல் என்ட்ரி: ஜனநாயகன் படம் தான் தனது கடைசி படம் என விஜய் தெரிவித்திருக்கிறார். அரசியலில் மும்மூரமாக ஈடுபட்டிருக்கும் விஜய், ஜனநாயகன் படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார். இப்படம் அரசியல் களத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என கணக்கு போட்டு நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய்யின் அரசியல் என்ட்ரியால் அவரது ரசிகர்களும் சோகம் அடைந்துள்ளனர். எம்ஜிஆர் படத்தில் நடித்துகொண்டே அரசியல்வாதியாகவும் இருந்தார். அதேபோன்று விஜய்யும் படங்களில் நடிக்கலாம் என அவரது ரசிகர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். இந்நிலையில், சச்சின் படம் ரீ ரிலீஸை விஜய் ரசிகர்கள் புனித வெள்ளியான இந்நாளில் கொண்டாட ஆவலோடு இருக்கின்றனர்.
மிஷ்கின் நெகிழ்ச்சி: நேற்று மா்லை சென்னை சத்யம் திரையரங்கில் சச்சின் படத்தின் பிரிமியர் ஷோ திரையிடப்பட்டது. இப்படத்தை பார்த்த திரை பிரபலங்களும், பத்திரிகையாளர்களும் மீண்டும் விஜய்யை கல்லூரி பையனாக பார்ப்பது போன்று இருப்பதாகவும் சிலாகித்து பேசினார்கள். அப்போது இந்நிகழ்வில் பங்கேற்ற இயக்குநர் மிஷ்கின் விஜய்யை மனதார பாராட்டி பேசியிருக்கிறார். அப்போது பேசிய மிஷ்கின், 27 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். என் மனதிற்கு நெருக்கமான நடிகராக விஜய் இருக்கிறார். எனது சினிமா கரியரும் அவர் நடித்த யூத் படத்தில் தான் தொடங்கியது. அதேபான்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சார் ரொம்ப அருமையான மனிதர். அவர் என்னை இப்படம் பார்க்க அழைத்தார். மகிழ்ச்சியோடு வந்து கலந்துகொண்டேன் என தெரிவித்தார்.

என்ஜாய் பண்ணேன்: பின்னர் பேசிய மிஷ்கின், நாம லவ் பண்ணும் போது எப்படி குழந்தை தனமாக இருப்போமோ அதேபோன்ற குழந்ததை தனத்துடன் சச்சின் படம் இருந்தது. முதல் முறையாக தற்போது தான் சச்சின் படத்தை பார்த்தேன். Vijay Looks So Handsome.. கல்லூரி காலத்துக்கு போயிட்டு வந்த மாதிரி இருக்கு.. ரொம்ப என்ஜாய் பண்ணேன். அவர் இன்னும் நிறைய படங்கள் பண்ணனும்னு ஆசைப்படுகிறேன் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











