twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “கடைசி விவசாயி“ தந்த மகா கலைஞன் மணிகண்டன்… நெகிழ்ந்து பாராட்டிய மிஷ்கின் !

    |

    சென்னை : கடைசி விவசாயி படத்தின் இயக்குநர் மணிகண்டனை அவரது சொந்த ஊருக்கே சென்று மனதார பாராட்டி உள்ளார் மிஷ்கின்.

    80 வயது முதியவரான நல்லாண்டி தான் இப்படத்தின் நாயகன். இவர் மாயாண்டி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட வாழ்ந்த இருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அவ்வளவு எதார்த்தமான நடிப்பு.

    இத்திரைப்படத்தை பார்த்தை பலர் இயக்குநரையும் , நல்லாண்டியையும் பாராட்டி புகழ்ந்து வருகின்றனர்.

    விவசாயிகளின் வாழ்க்கை முறையையும் போராட்டத்தையும் அப்படியே பிரதிபலிக்கும் கடைசி விவசாயி!விவசாயிகளின் வாழ்க்கை முறையையும் போராட்டத்தையும் அப்படியே பிரதிபலிக்கும் கடைசி விவசாயி!

    கடைசி விவசாயி

    கடைசி விவசாயி

    காக்கா முட்டை, மணிகண்டன் இயக்கி, தயாரித்துள்ள படம் கடைசி விவசாயி. இப்படத்தில் நாயகனாக நல்லாண்டி என்ற முதியவர் நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். இப்படம் பிப்ரவரி 12ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது.

    சோகக் கதை அல்ல

    சோகக் கதை அல்ல

    படத்தின் தலைப்பை வைத்து இது விவசாயிகளின் சோகக் கதையினை, அவல வாழ்க்கையை அழுது அழுது சொல்லப் போகிற சினிமா எனத் தோன்றலாம். ஆனால் மணிகண்டன் அப்படி படத்தை அப்படி இயக்காமல். இந்த கதையை வேறு விதமாக கையாண்டிருக்கிறார். ஒரு சம்சாரியின் வாழ்க்கையினை மிக நெருக்கமாக நின்று படம் பிடித்து நமக்குக் காட்டியிருக்கிறார். இப்படம் பலரின் பாராட்டை பெற்று வருகிறது.

    ஆரத் தழுவி

    ஆரத் தழுவி

    இந்நிலையில், மணிகண்டனின் சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு சென்றுள்ளார் இயக்குநர் மிஷ்கின். அவரை சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடைசி விவசாயி தந்த மகா கலைஞனான மணிகண்டனை அவன் ஊரான உசிலம்பட்டிக்குச் சென்று சந்தித்தேன். ஆரத் தழுவினேன். மிகச் சிறந்த படைப்பைத் தமிழுக்குத் தந்த அவனுக்கு நன்றி கூறி, அவன் கரங்களை முத்தமிட்டேன்.

    உன் பயணம் தொடரட்டும்

    படத்தின் கதையின் நாயகனாக, ஒட்டுமொத்த இந்தியாவின் எல்லா விவசாயிகளின் அடையாளமாக வாழ்ந்த பெரியவரின் வீட்டுக்குச் சென்று அவர் புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினேன். மணிகண்டன் படப்பிடிப்பு செய்த இடத்திற்குச் சென்று மதிய உணவு உண்டோம். இந்த முழு நாளும் ஒரு அற்புத நாளாக மாறியது. மணிகண்டா, உன் பயணம் தொடரட்டும். உன்னை இயற்கை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்.அன்புடன். மிஷ்கின். என பதிவிட்டுள்ளார்.

    English summary
    Director Mysskin praises kadaisi vivasayi Director manikandan, கடைசி விவசாயி பட இயக்குநர் மணிகண்டனை மிஸ்கின் பாராட்டினார்.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X