மலையாள நடிகைகள் எல்லாம் பயங்கரமான பேய் மாதிரி: மிஷ்கின்
Recommended Video

சென்னை: மலையாளத்தில் இருந்து வருகிறவர்கள் எல்லாம் பயங்கரமான பேய் மாதிரி என்று இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
சிவகுமார் இயக்கத்தில் கவின், ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் நட்புனா என்னானு தெரியுமா. படத்திற்கு தரண் குமார் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின் பேசியதாவது,

காக்கா கூட்டம்
வெளிநாடுகளில் இருந்து தயாரிப்பாளர்கள் வந்தால் ஒரு காக்கா கூட்டம் அவர்களை வந்து சுற்றி நிற்கும். அவர்கள் தயாரிப்பாளர் ரவியிடம் சொன்னது, யாரிடம் வேண்டுமானாலும் டைரக்ட் பண்ணுங்க. மிஷ்கினிடம் மட்டும் போயிடாதீங்க என்று தெரிவித்துள்ளனர்.

ரவி
தடியாக இருந்தால் நல்லவராக இருப்பார்கள் என்பது என் நம்பிக்கை. அதனால் தான் நான் ஒல்லியாகவில்லை. ரவி ரொம்ப சின்சியராக பேசினார். மரணப் படுக்கையில் பார்க்கத் துடிக்கும் முகம் நண்பனின் முகம்.

இந்தியா
நாம் இறந்தால் தூக்கிச் செல்லும் நான்கு பேரில் ஒருவராக நண்பன் இருக்க வேண்டும். நட்பை கொண்டாடும் இந்தியாவில் பிறந்ததற்காக நாம் எல்லாம் பெருமைப்பட வேண்டும்.

சினிமா
தயாரிப்பாளர் ரவி என்னை முதன்முதலாக சந்தித்தபோது புதுமுகங்களை வைத்து ரூ. 25 கோடியில் படம் எடுங்க சார் என்று கூறினார். தமிழ் சினிமாவில் டீசன்டாக படம் பண்ணினால் தான் தோற்போம்.

மலையாள நடிகர்கள்
ஹீரோ, ரம்யா நன்றாக நடித்துள்ளனர். மலையாளத்தில் இருந்து வருகிறவர்கள் எல்லாம் பயங்கரமான பேய் மாதிரி. அவர்களுக்கு எவ்வளவு சாப்பாடு போட்டாலும் தாங்காது. அந்த அளவுக்கு சிறப்பாக நடிப்பார்கள்.

அரசியல்
கரு பழனியப்பன் அரசியலுக்கு வர வேண்டும். உளறாமல் அரசியல் பேசுகிறான். பல பேர் கஷ்டப்பட்டு எடுக்கும் படத்தை 2 நிமிடத்தில் டவுன்லோடு செய்து பார்க்காதீர்கள். பார்த்தால் கேவலம், திருடர்கள் என்று அர்த்தம்.

கேவலம்
தமிழ் ராக்கர்ஸ் மீது தனிப்பட்ட வகையில் எனக்கு கோபம் இல்லை. கலையை திருடுவது என் மகளை என் கண் முன்னே நிர்வாணமாக்கிப் பார்ப்பது போன்று என்றார் மிஷ்கின்.


Click it and Unblock the Notifications











