லியோ படத்தில் நடிக்க மிஷ்கினுக்கு இவ்வளவு சம்பளமா? அதனால தான் இயக்குனர்கள் எல்லாம் நடிக்கிறாங்களா?

சென்னை: ஆரம்பத்திலேயே லியோ படத்திற்காக எடுக்கப்பட்ட கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியை ரிவீல் செய்து விட்டார் இயக்குனர் மிஷ்கின். விஜய்யுடன் சண்டைப் போட்டுட்டு வரேன், என் மூஞ்செல்லாம் அடிச்சு கொழப்பிட்டாருன்னு பேசி விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

தளபதி 67 படத்திற்கு லியோ என்கிற டைட்டில் வைக்கப்பட்டு ப்ரோமோ வீடியோ வெளியாகி டிரெண்டாகி வரும் நிலையில், இயக்குநர் மிஷ்கின் இந்த படத்தில் நடிக்க வாங்கும் சம்பளம் குறித்த தகவல்கள் திரையுலகில் பல இயக்குனர்களையே மிரள செய்திருக்கிறதாம்.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு அடுத்து வெயிட்டான ரோலே இயக்குனர் மிஷ்கினுக்குத்தான் என்கின்றனர்.

டிரெண்டிங்கில் தெறிக்கும் லியோ

டிரெண்டிங்கில் தெறிக்கும் லியோ

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் போட்ட ஷர்ட் மாதிரியே இருக்கு என்றும் ஷாட்ஸ் கூட அந்த படத்தில் இருந்து சுட்டது என என்ன தான் நெட்டிசன்கள் கலாய்த்தாலும் விஜய்யின் லியோ படத்தின் ப்ரோமோ வீடியோ இதுவரை 32 மில்லியன் வியூஸை கடந்து யூடியூபில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

அஜித் ரசிகர்கள் சோகம்

அஜித் ரசிகர்கள் சோகம்

லியோ படத்துக்கு எதிராக நெகட்டிவ் ட்ரோல் கூட போட முடியாத அளவுக்கு அஜித் ரசிகர்கள் ஏகே 62 படத்தின் அறிவிப்பு வராததால் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர். இயக்குநர் விக்னேஷ் சிவன் அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அடுத்த இயக்குநர் யாரென்று அறிவிப்பதை லைகா நிறுவனம் இன்னமும் உறுதி செய்யவில்லை என்கின்றனர்.

த்ரிஷா அதுக்குள்ள ரிட்டர்ன்

த்ரிஷா அதுக்குள்ள ரிட்டர்ன்

காஷ்மீருக்கு விஜய் மற்றும் படக்குழுவுடன் சென்ற நடிகை த்ரிஷா அங்கே டூயட் பாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடனடியாக டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள், அதற்குள் த்ரிஷா தலையை தனியா வெட்டி எடுத்துட்டாரா லோகேஷ் கனகராஜ், அடுத்து பிரியா ஆனந்த் தானா என கலாய்த்து வருகின்றனர்.

இரண்டு இயக்குனர்கள்

இரண்டு இயக்குனர்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் லியோ படத்தில் கெளதம் மேனன் மற்றும் மிஷ்கின் என இரு இயக்குனர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இவர்களை வைத்து ஏகப்பட்ட ட்ரோல் மீம்கள் உலா வந்து கொண்டிருக்கும் நிலையில், இருவரில் மிஸ்கினுக்கு அதிக முக்கியத்துவம் இந்த படத்தில் இருப்பதாக கூறுகின்றனர்.

விஜய்யுடன் சண்டை

விஜய்யுடன் சண்டை

இயக்குனர் மிஷ்கின் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடந்த நிலையில், நடிகர் விஜய்யுடன் கடும் சண்டை நடந்ததாக நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாகவே பேசி விட்டார். ஆரம்பத்திலேயே கிளைமேக்ஸ் காட்சியை எடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியைத்தான் எடுத்து விட்டார் என மிஷ்கின் சொன்னதை வைத்து பலரும் கணித்து வருகின்றனர்.

மிஷ்கின் சம்பளம்

மிஷ்கின் சம்பளம்

காஷ்மீர் படப்பிடிப்புக்கு இயக்குனர் மிஷ்கின் சென்றது போல தெரியவில்லை. ஆனால், லியோ படத்தில் நடிக்க மிஷ்கினுக்கு கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் குறித்த தகவல் தான் தற்போது கோடம்பாக்கத்தில் பெரும் பேச்சாக அடிபட்டு வருகிறது. விஜய் படத்தில் நடிக்க ஒரு நாளைக்கு அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை மிஷ்கின் சம்பளமாக வாங்குகிறார் எனக் கூறுகின்றனர்.

நடிகர்களாகும் இயக்குனர்கள்

நடிகர்களாகும் இயக்குனர்கள்

சமீப காலமாக இயக்குநர்கள் நடிகர்களாக ஏன் மாறி வருகின்றனர் என்பதற்கான விடையும் கிடைத்துள்ளது. குறைந்த பட்ஜெட்டில் படங்கள் எடுத்து வரும் நல்ல இயக்குநர்கள் நடிகர்களாக சமீப காலமாக மாறி வரக் காரணமே இப்படி அதிக சம்பளம் கொடுத்து அவர்களை நடிக்க அழைப்பது தான் என்கின்றனர். இயக்குனர் கெளதம் மேனன் ஒரு நாளைக்கு 5 முதல் 6 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறார் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X