கொரோனா லாக்டவுனில் முதல் ஆபிஸ் பூஜை.. 'சவரக்கத்தி'யை அடுத்து மிஷ்கின் தம்பி இயக்கும் 'பிதா'!

By

சென்னை: சவரக்கத்தி படத்தை அடுத்து மிஷ்கின் தம்பி இயக்கும் படத்துக்கு பிதா என்று டைட்டில் வைத்துள்ளனர்.

கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. சினிமா ரிலீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சில மாநிலங்களில் சில நிபந்தனைகளுடன் படப்பிடிப்பை தொடங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்புகள்

படப்பிடிப்புகள்

ஆனாலும் சினிமா படப்பிடிப்பை யாரும் தொடங்கவில்லை. சின்னத்திரை படப்பிடிப்பை சிலர் தொடங்கி நடத்தி வந்தனர். தெலுங்கு சின்னத்திரை படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர், நடிகைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 8 ஆம் தேதிக்கு பிறகு சின்னத்திரை படப்பிடிப்பை மீண்டும் தொடங்க இருப்பதாக பெப்சி தெரிவித்துள்ளது.

மிஷ்கின் தம்பி ஆதித்யா

மிஷ்கின் தம்பி ஆதித்யா

இதற்கிடையே புதிய படங்கள் பற்றிய அறிவிப்போ, பூஜையோ இதுவரை எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் இயக்குனர் மிஷ்கினின் தம்பி ஆதித்யா இயக்கும் படத்துக்கான அலுவலக பூஜை இன்று போடப்பட்டுள்ளது. இதில் இயக்குனர்கள் மிஷ்கின், ஆதித்யா, தயாரிப்பாளர் மதியழகன் மற்றும் படத்தில் நடிகர் நடிகர்கள், டெக்னீஷியன்கள் கலந்துகொண்டனர்.

தயாரிப்பாளர் மதியழகன்

தயாரிப்பாளர் மதியழகன்

இயக்குனர் ஆதித்யா, ஏற்கனவே ராம், மிஷ்கின், பூர்ணா நடித்த சவரக்கத்தி படத்தை இயக்கி இருந்தார். அடுத்து இந்தப் படத்தை இயக்குகிறார். அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர் படத்தைத் தயாரிக்கும் மதியழகன், அந்த படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார். அதை அடுத்து இந்தப் படத்திலும் கொடூர வில்லனாக நடிக்கிறார். இவர் சில படங்களை தயாரித்துள்ளார்.

 ரமேஷ் திலக்

ரமேஷ் திலக்

மிஷ்கின், ஸ்ரீகிரீன் சரவணன், மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்ரேஷன்ஸ் இணைந்து படத்தைத் தயாரிக்கிறது. கலையரசன், ரமேஷ் திலக், அனு கீர்த்தி வாஸ், ராதா ரவி உட்பட பலர் நடிக்க இருக்கின்றனர். இதற்காக பிரபல நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பிரசன்ன குமார் இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X