ஆபிஸில் பெண் ஊழியருடன் ஜல்சா.. அந்த நேரம் பார்த்து பொண்டாட்டி வேற வராங்க.. மிஷ்கினின் டெவில் சீன்!
சென்னை: மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா நடிப்பில் உருவான பிசாசு 2 திரைப்படம் இதுவரை வெளியாகாத நிலையில், அந்த படத்திற்கு பிறகு மிஷ்கின் தயாரித்து, இசையமைத்துள்ள டெவில் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை மிஷ்கினின் தம்பி ஆதித்யா இயக்கி உள்ளார். இந்நிலையில், டெவில் படத்தின் ஸ்நீக் பீக் ஒன்று தற்போது வெளியாகி தீயாக பரவி வருகிறது.
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, சைக்கோ உள்ளிட்ட பல வித்தியாசமான படங்களை இயக்கியவர் மிஷ்கின். சமீப காலமாக சினிமாவில் நடிகராகவும் அவதாரம் எடுத்து மிரட்டி வருகிறார். கடந்த ஆண்டு மிஷ்கின் நடித்த மாவீரன் மற்றும் லியோ திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன.

மிஷ்கினின் டெவில்: மிஷ்கின் தயாரித்து இசையமைத்துள்ள டெவில் திரைப்படம் வரும் பிப்ரவரி 2ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் சுபஸ்ரீ உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். தனது படங்களுக்கு இளையராஜாவின் இசையை பயன்படுத்தி வந்த மிஷ்கின் சில ஆண்டுகள் முயற்சி செய்து தானே இசையை கற்றுக் கொண்டு தம்பி படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
பூர்ணா வயிற்றில் குழந்தையாக: சமீபத்தில் டெவில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய மிஷ்கின் நடிகை பூர்ணா வயிற்றில் நான் குழந்தையாக பிறக்க வேண்டும். அவள் என்னை தாய் போல பார்த்துக் கொள்வாள் என பேசினார். என் குழந்தை நல்லா இருக்குதோ இல்லையோ பூர்ணா குழந்தை நல்லா இருக்க வேண்டும். கடைசி வரை அவர் சினிமாவில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று பேசினார். இயக்குநர் ராம் தனது படங்களில் தொடர்ந்து அஞ்சலியை நடிக்க வைத்து வருகிறோ அதே போல மிஷ்கின் தனது படங்களில் பூர்ணாவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
பென்சிலை வாயில் வைத்து: பிப்ரவரி 2ம் தேதி மிஷ்கினின் டெவில் படம் வெளியாக உள்ள நிலையில், தற்போது அந்த படத்தின் ஸ்நீக் பீக் ஒன்று வெளியாகி உள்ளது. அதில், நடிகர் வித்தார்த் அலுவலகத்தில் மீட்டிங்கில் உள்ள நிலையில், நடிகை சுபஸ்ரீ தனது வாயில் பென்சிலை வைத்து உருட்டிக் கொண்டிருப்பதை காமப்பார்வையுடன் பார்க்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அலுவலகத்தில் ஜல்சா: மேலும், சுபஸ்ரீயை வேலை நிமித்தமாக இன்னொரு அறைக்கு அனுப்பி விட்டு பின்னாடியே வரும் விதார்த் அவரிடம் அலுவலகத்திலேயே ஜல்சா பண்ணும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அப்போது தனது கணவரை காண பூர்ணா அலுவலகத்திற்கு அதே நேரம் வருவதுடன் அந்த காட்சியை முடித்து விட்டனர். எப்படி இருந்தாலும் அந்த சந்தர்ப்பத்தில் சிக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது.
உல்லு வெப்சீரிஸ்: இதெல்லாம் உல்லு வெப்சீரிஸில் ஏகப்பட்ட கதைகளாக எடுத்து வருகின்றனர். இதை போய் படமாக எடுத்து தியேட்டரில் இப்போது விடுகிறாரே மிஷ்கின், டெவில் என்ன ஆகுமோ என ரசிகர்கள் அந்த காட்சியை பார்த்து கழுவி ஊற்றி வருகின்றனர். மிஷ்கின் இயக்கத்தில் சமீப காலமாக வெளியாகும் படங்கள் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், அவர் தம்பி இயக்கி உள்ள டெவில் படம் ஓடுமா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











