Just In
- 2 min ago
குட்டை உடையில் தொடை தெரிய போஸ்..கவர்ச்சி விருந்தளிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் !
- 8 min ago
அட இது என்ன ஃபேஷன்...இதுவும் நல்லத்தான் இருக்கு.. கலக்குங்க சமந்தா !
- 23 min ago
கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்!
- 1 hr ago
கவர்ச்சி காட்டி ரசிகர்களை கதறவிடும் காட்டேரி பட நடிகை!
Don't Miss!
- Automobiles
வேற லெவல் ஸ்டைலு... இந்திய சாலையில் காட்சித்தந்த சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ்!! ஆனா விலையை பார்த்தா ஆசையே போயிரும்
- News
உலகை மீண்டும் வழிநடத்துவோம்.. "அமெரிக்கா இஸ் பேக்".. உலக நாடுகளுக்கு பிடன் அனுப்பிய வலுவான மெசேஜ்!
- Sports
கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்!
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Lifestyle
நைட் நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் உடலில் நிகழும் சில பயங்கரமான விஷயங்கள்!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சொன்னதை செஞ்சிட்டாரே... தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டிய இயக்குனர்... பெண் டைரக்டர் நெகிழ்ச்சி
சென்னை: தான் சொன்னதை போல, தேசிய விருது பெற்ற பாரம் படத்தின் போஸ்டரை இயக்குனர் மிஷ்கின் ஒட்டினார்.
தேசிய விருது பெற்ற பாரம் படத்தை பிரியா கிருஷ்ணசுவாமி இயக்கி இருக்கிறார். ஆர்.ராஜூ, சுகுமார் சண்முகம், சுபா.முத்துக்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஆருத்ரா ஸ்வரூப் மற்றும் ப்ரியா கிருஷ்ணசுவாமி இணைந்து தயாரித்துள்ளனர். ஜெயந்த் ஒளிப்பதிவு செய்திருந்தார். வேத் நாயர் இசை அமைத்திருந்தார்.

போஸ்டர் ஒட்டுவேன்
இந்தப் படம் கடந்த 21 அன்று வெளியானது. கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டில் இயக்குனர் மிஷ்கின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது, நான் இயக்கிய சைக்கோ எல்லாம் ஒன்றுமில்லை. இதுதான் படம். படத்தை விளம்பரப்படுத்த போஸ்டர் அடிக்க பணம் இல்லை என்றார்கள். இந்த படம் வெளியாகும்போது தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டுவேன் என கூறி இருந்தார்.

சொந்த செலவில்
சொன்னபடியே, தற்போது அதை செய்து காட்டியுள்ளார். பாரம் படத்திற்காக அவர் தனது சொந்த செலவில் போஸ்டர் ஒட்டியுள்ளார். சென்னையின் சில பகுதிகளில் அவர் போஸ்டர் ஒட்டிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இயக்குநர் மிஷ்கினின் செயலுக்கு பாரம் படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

அன்பும் ஆதரவும்
இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசுவாமி கூறும்போது, 'பாரம் படம் மீது இயக்குநர் மிஷ்கின் காட்டிவரும் அன்புக்கு விலைமதிப்பு இல்லை. அவர் இந்தியாவின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவர். இவ்வளவு உயரத்தில் இருந்துகொண்டு புதுமுகங்களான எங்கள் மீது அவர் காட்டும் அன்பும் ஆதரவும் பிரமிப்பானது.

பெருகியிருக்கிறது
இந்த அன்புக்கு ஈடு இணை ஏதுமில்லை. பாரம் படத்தின் டிரைலர் வெளியீட்டின் போது அவர் பேசியதில் இருந்தே இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு பரவ ஆரம்பித்தது. தற்போது அவர் போஸ்டர் ஒட்டியதன் மூலம் படத்தின் மீதான கவனம் பன்மடங்கு பெருகியிருக்கிறது. இந்த அன்பு எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்று கூறியுள்ளார்.