twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஷூட்டிங் தொடங்கும் முன்பே மிஷ்கின் படத்துக்குச் சிக்கல்.. பெயரைப் பயன்படுத்த தயாரிப்பாளர் எதிர்ப்பு!

    By
    |

    சென்னை: ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே, மிஷ்கின் படம் பிரச்னையை சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    Recommended Video

    Corona Specialist | Lala Quarantine | Sandy's Princess

    சவரக்கத்தி படத்தை அடுத்து மிஷ்கின் தம்பி ஜி.அர்.ஆதித்யா இயக்கும் படத்துக்கு பிதா என்று டைட்டில் வைத்துள்ளனர்.

    கொரோனா லாக்டவுன் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் சில நிபந்தனைகளுடன் படப்பிடிப்பை தொடங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

     இந்த நேரத்துல ஷூட்டிங் போறது, போருக்குப் போற மாதிரிதான் இருக்கு.. பிரபல சின்னத்திரை நடிகை கவலை! இந்த நேரத்துல ஷூட்டிங் போறது, போருக்குப் போற மாதிரிதான் இருக்கு.. பிரபல சின்னத்திரை நடிகை கவலை!

    புதிய படங்கள் பூஜை

    புதிய படங்கள் பூஜை

    ஆனாலும் சினிமா படப்பிடிப்புத் தொடங்கப்படவில்லை. சின்னத்திரை படப்பிடிப்பை சிலர் தொடங்கி நடத்தி வந்தனர். தெலுங்கு சின்னத்திரை படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர், நடிகைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
    தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளன. லாக்டவுனால் புதிய படங்களின் பூஜை எதுவும் நடக்கவில்லை.

    தயாரிப்பாளர் மதியழகன்

    தயாரிப்பாளர் மதியழகன்

    இந்நிலையில் இயக்குனர் மிஷ்கினின் தம்பி ஜி.அர்.ஆதித்யா இயக்கும் 'பிதா' என்ற படத்துக்கான அலுவலக பூஜை கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. இதில் இயக்குனர்கள் மிஷ்கின், ஆதித்யா, தயாரிப்பாளர் மதியழகன், படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் கலந்துகொண்டனர். அருண்விஜய் நடிக்கும் பாக்ஸர் படத்தை அடுத்து இந்தப் படத்திலும் மதியழகன் வில்லனாக நடிக்கிறார்.

    பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    இந்தப் படத்தில் கலையரசன், ரமேஷ் திலக், அனு கீர்த்தி வாஸ், ராதாரவி உட்பட பலர் நடிக்க இருக்கின்றனர். பிரபல நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் ஒளிப்பதிவாளர் பிரசன்னகுமார் இதற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். மிஷ்கின், ஸ்ரீகிரீன் சரவணன், மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்ரேஷன்ஸ் இணைந்து படத்தைத் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

    தொடர்பு இல்லை

    தொடர்பு இல்லை

    இந்த மூன்று நிறுவனங்களின் லோகோக்களும் படத்தின் போஸ்டரில் இடம்பெற்றன. இது இப்போது சர்ச்சை ஆகி இருக்கிறது. மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'பிதா படத்துக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அதனால் எங்கள் நிறுவனத்தின் பெயரையோ, லோகோவையோ போஸ்டரில் பயன்படுத்தக் கூடாது' என்று தெரிவித்துள்ளது.

    English summary
    Mysskin's Recently annouced Pitha faces a new problem from the producer of Malik Streams Corporation.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X