அது உதயநிதி தானா.. பப்பி ஷேம்.. நிஜமாவே இது சைக்கோதான்!

Recommended Video

வசனமாடா முக்கியம் உதயநிதியை பாருங்க டா !

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் சைக்கோ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டுள்ள இந்த டீசரில் ஆரம்ப காட்சியிலே முழு நிர்வாணமாக நடித்து உதயநிதி ஸ்டாலின் மிரட்டுகிறார்.

சென்னை: மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கோ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இளையராஜா இசையில் உருவாகியுள்ள சைக்கோ படத்தின் டீசரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார்.

எந்தவொரு வசனமும் இல்லாமல் செல்லும் டீசரின் முதல் காட்சியில் முழு நிர்வாண காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஆடை போட்ட மேடை

ஆடை போட்ட மேடை

அமலாபால் நடித்த ஆடை படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பால், இனி தமிழ் சினிமாவில் அதிக அளவிலான நிர்வாண காட்சிகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு ஆரம்ப புள்ளியாக மிஷ்கின், சைக்கோ டீசரிலேயே முழு நிர்வாணக் காட்சி ஒன்றை வைத்துள்ளார்.

டீசர் எப்படி?

டீசர் எப்படி?

இளையராஜவின் இசை மட்டுமே டீசர் முழுவதும் ஆட்சி செய்கிறது. வேறு எந்தவொரு வசனமும் டீசரில் இடம்பெறவில்லை. ஆனால், மிஷ்கினின் ஆழமான அழுத்தமான காட்சிகள் டீசர் முழுவதும் திகிலை உண்டாக்கும் விதமாகவே அமைந்துள்ளது.

கண் தெரியாத நபராக நடித்திருக்கும் உதயநிதி ஸ்டாலின், காரில் பயந்து கொண்டே செல்லும் நித்யா மேனன், கதவை திறந்து கொண்டு எட்டிப் பார்க்கும் அதிதி ராவ், முகம் சிதைக்கப்பட்டு, மரப்பாச்சி முகத்துடன் இருக்கும் அந்த பெண்ணின் பிணம் என டீசர் நெடுகிலும் த்ரில் நிறைந்திருக்கிறது.

ராட்சசன் ஞாபகம்

ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ராட்சசன் திரைப்படத்தை பல இடத்திலும் நினைவு படுத்துகிறது சைக்கோ டீசர். ராட்சசன் படத்தில் கொடூரமான கொலைகள் மற்றும் சைக்கோ கொலைகாரனை காட்டிவிட்டதால், சைக்கோவின் டீசரை பார்க்கும் போது, அந்த தாக்கம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

மணிரத்னம் நாயகிகள்

மணிரத்னம் நாயகிகள்

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள சைக்கோ படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓகே கண்மணி படத்தில் நடித்திருந்த நித்யா மேனன் மற்றும் காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த அதிதி ராவ் ஆகிய இருவரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசரை இன்று மாலை 4 மணிக்கு மணிரத்னம் சென்னையில் நடந்த விழாவில் வெளியிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X