சைக்கோ சாதாரண படமல்ல.. படு பயங்கரமா இருக்கும்.. அதுக்கு இந்த ஒத்த போஸ்டரே சாட்சி!

Recommended Video

Psycho - Sneak Peek | udhayanidhi Stalin | Mysskin | Nithya Menon | Aditi Rao

சென்னை: மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், ராம் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கோ படம் நாளை ரிலீசாகிறது.

தமிழில் வெளியான சைக்கோ த்ரில்லர் படங்களிலேயே விஷ்ணு விஷாலின் ராட்சசன் படம் மிகப்பெரிய பயத்தையும் வெற்றியையும் பதிவு செய்தது.

மிஷ்கினின் சைக்கோ படமும் படு பயங்கரமாக ரசிகர்களை மிரட்டும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தற்போது வெளியாகியுள்ள ஸ்நீக் பீக் மற்றும் போஸ்டர் மிரட்டுகிறது.

ராட்சசன்

ராட்சசன்

ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், முனிஷ் காந்த், காளி வெங்கட், நான் சரவணன் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான ராட்சசன் படம், இந்தியாவில் வெளியான சைக்கோ த்ரில்லர் படங்களிலேயே மிகவும் பயங்கரமாகவும், எக்ஸ்ட்ரீம் கொலைக் காட்சிகளையும் கொண்டு மிரட்டியது.

ரூட்

ரூட்

அந்த படம் போட்டுக் கொடுத்த ரூட் பல படங்களுக்கு உறுதுணையாகவும், அடுத்த கட்ட அளவில் கொடூரமான கொலைக் காட்சிகளை வடிவமைக்க உதவியுள்ளது. ராட்சசன் படத்தை தொடர்ந்து சைக்கோ எனும் பெயரிலேயே சைக்கோ த்ரில்லர் படமாக மிஷ்கின் உருவாக்கியுள்ள இந்த படத்திலும் எக்ஸ்ட்ரீம் கொலைக் காட்சிகள் ரசிகர்களை கதி கலங்க வைக்க உள்ளன.

ஏ சர்ட்டிபிகேட்

ஏ சர்ட்டிபிகேட்

கொடூர கொலைகள், ரத்தம், ஆபாச வசனங்கள், ஆபாச காட்சிகள் போன்றவை ஒரு சினிமாவில் பயன்படுத்தப் பட்டிருந்தால், அந்த படத்திற்கு தணிக்கைக் குழு ஏ சர்ட்டிபிகேட் வழங்கும், சைக்கோ படத்தில் இவை அத்தனையும் மொத்தமாக சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சைக்கோ படத்தின் டீசரிலேயே, வில்லன் ஒரு காட்சியில் முழு நிர்வாணமாக நிற்கிறார்.

ஷார்ட் ஃபிலிம் போட்டி

சைக்கோ படத்தை ரசிகர்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கில் குறும்பட இயக்குநர்களுக்கு ஒரு போட்டியையும் மிஷ்கின் வைத்துள்ளார். சைக்கோ சப்ஜெக்ட் கொண்ட 2 நிமிட குறும்படத்தை மொபைல் போனில் எடுத்து வரும் ஜனவரி 27ம் தேதிக்குள் #Psychoshortfilmcontest என்ற ஹாஷ்டேக் போட்டு இன்ஸ்டாகிராமில் அனுப்ப அறிவுறுத்தியுள்ளனர்.

மிரட்டல் போஸ்டர்

கண் தெரியாத நபராக உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் சைக்கோ படம் நாளை திரைக்கு வருகிறது. இந்நிலையில், நாளை முதல் சைக்கோ ரிலீசாகிறது என்ற பேப்பர் போஸ்டர் மிரட்டி வருகிறது. அந்த போஸ்டரில் போலீஸ் அதிகாரி ஒருவரின் எழும்புக் கூடு யூனிஃபார்ம் உடன் படு பயங்கரமாக இருக்கிறது.

ஸ்நீக் பீக்

அதே போல, சைக்கோ படத்தின் புதிய ஸ்நீக் பீக் காட்சியும் வெளியாகி ரசிகர்களை மிரட்டி வருகிறது. இந்த படத்தை கர்ப்பிணி பெண்கள், இதய நோயாளிகள் பார்க்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. உதயநிதி ஸ்டாலின் கேரியரில் சைக்கோ படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X