தப்பித்தது மிஷ்கினின் ’சைக்கோ’ டைட்டில்.. ஆனா ரிலீஸ் எப்போ தெரியுமா?

சென்னை: மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போயுள்ளது.

டபுள் மீனிங் புரொடக்‌ஷன் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கோ படம் வரும் டிசம்பர் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், 'சைக்கோ' தலைப்பை மாற்ற வேண்டும் என்ற சென்சார் பிரச்சனையின் காரணமாக அதன் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது.

டைட்டில் பிரச்சனை

டைட்டில் பிரச்சனை

உதயநிதி ஸ்டாலினின் மனிதன் பட தலைப்புக்கே பிரச்சனைகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 'சைக்கோ' என்ற தலைப்பு வைக்கக் கூடாது என புதிய பிரச்சனை கிளம்பி படக்குழுவுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. ஆனால், ஒரு வழியாக டைட்டில் பிரச்சனையை பேசி சரி செய்துள்ளனர்.

மேஜிக் மிஷ்கின்

மேஜிக் மிஷ்கின்

துப்பறிவாளன் படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ படம் ரிலீசுக்கு ரெடியாகியுள்ளது. இதனையடுத்து, லண்டனில் துப்பறிவாளன் 2 படத்தில் பிஸி ஆகியுள்ளார் மிஷ்கின். தமிழ் சினிமாவில் புதுமையான படங்களை கொடுப்பதில் மிஷ்கின் தனது மேஜிக்கை தொடர்ந்து காட்டி வருகிறார்.

பாட்டு ஹிட்

இளையராஜா இசையில் சித் ஸ்ரீராம் குரலில் வெளியான சைக்கோ படத்தின் 'உன்ன நெனச்சு' பாடல் 2.7 மில்லியன் ரசிகர்களை கடந்து மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளது. சைக்கோ படத்தில் அந்த பாடலை பார்க்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

எப்போ ரிலீஸ்

டிசம்பர் 27ம் தேதி நியூ இயர் ஸ்பெஷலாக சைக்கோ படம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் ஜனவரி 24ம் தேதி சைக்கோ படம் திரைக்கு வருகிறது. புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அந்த அறிவிப்பை நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கடும் போட்டி

கடும் போட்டி

ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி படமும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படமும் இந்த ஆண்டே வெளியாகி இருக்க வேண்டும். ஜிப்ஸி படத்திற்கும் சென்சார் போர்டு பிரச்சனைகள் இருந்த நிலையில், அடுத்த ஆண்டு வெளியாகிறது. இதனால், வரும் ஜனவரி 24ம் தேதி ஜிப்ஸி மற்றும் சைக்கோ படங்களுக்கு இடையே கடும் போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X