பலாத்காரம், கேலி கூத்தாக போச்சா மிஷ்கின்?: வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்
சென்னை: நான் ஒரு பெண்ணாக இருந்தால் மம்மூட்டியை பலாத்காரம் செய்திருப்பேன் என்று மிஷ்கின் கூறியது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
ராம் இயக்கியுள்ள பேரன்பு பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின் உரையாற்றினார். மம்மூட்டி பற்றி பேசியபோது அவர் கூறியதாவது, மம்மூட்டி சார் வயது கம்மியாக ஒரு பெண்ணாக இருந்திருந்தால் நான் அவரை காதலித்திருப்பேன். நான் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் அவரை பலாத்காரம் செய்திருப்பேன் என்று பெருமையாக பேசினார்.
அவரின் பேச்சு பலருக்கும் பிடிக்கவில்லை.

மம்மூட்டி
பேரன்பு படத்தையும், மம்மூட்டியையும் புகழ்ந்து தள்ள வேண்டுமானால் நாகரீகமாக பேசியிருக்கலாமே. பலாத்காரம் என்பது கேளிக்கூத்தாகிவிட்டதா என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

சிறுமி
சென்னையில் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமி 22 பேரால் 7 மாதங்களாக பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்து மக்கள் கொந்தளித்துள்ளனர். இந்நிலையில் மிஷ்கினின் பேச்சு எரிச்சல் அடைய வைத்துள்ளது.
பிரசன்னா
மிஷ்கினின் அருவெறுப்பு பேச்சு குறித்த செய்தியை பார்த்த நடிகர் பிரசன்னா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, மிஷ்கின் என் நண்பர். ஆனால் பெண்கள், தமிழ் நடிகர்கள் பற்றி அவர் பேசியது அருவெறுப்பாக உள்ளது. அவர் பேச்சை கேட்டு சிரித்தவர்களுக்காக பரிதாபப்படுகிறேன் என்றார்.
கைதட்டல்
ஒருவரை பலாத்காரம் செய்வது பற்றி மிஷ்கின் பேசியதை கேட்டு அங்கிருந்த பார்வையாளர்கள் கைதட்டியுள்ளனர். இதை விட வெட்கக்கேடு என்ன இருக்க முடியும்.


Click it and Unblock the Notifications











