இன்னும் கொஞ்ச நாள்தான் சினிமாவில் இருப்பேன்! - மிஷ்கின்
இன்னும் கொஞ்ச நாள்தான் சினிமாவில் இருப்பேன். அதுவரை நல்லடங்கள் மட்டுமே எடுப்பேன் என்று கூறியுள்ளார் இயக்குநர் மிஷ்கின்.
சித்திரம் பேசுதடி மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த மிஷ்கின், தன் படைப்புகளில் சமரசம் செய்து கொள்ளாத நல்ல இயக்குநர் என்று பெயரெடுத்திருப்பவர். அவ்வப்போது அவர் சில சர்ச்சைகளில் சிக்கினாலும், அவரது சினிமாக்கள் பாராட்டுக்களைப் பெறத் தவறியதில்லை.

பிசாசு
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்குப் பிறகு இப்போது பிசாசு என்ற புதுப் படத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் படத்தை பாலா தயாரிக்கிறார்.
இந்த நிலையில் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில், சினிமாவில் இன்னும் கொஞ்ச காலம்தான் இருப்பேன் என்று கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.

கொஞ்ச நாள்தான்
இன்னும் எத்தனை சினிமா எடுப்பீங்கனு நினைக்கிறீங்க?, என்ற கேள்விக்கு பதிலளித்த மிஷ்கின், "ஒட்டுமொத்தமா ஒரு வருஷ உழைப்பை ஒரு சினிமா எடுத்துக்கும்போது, வாழ்க்கையில வேற எதுவுமே இல்லாத மாதிரியே தோணுது. இன்னும் கொஞ்ச நாள்தான் சினிமாவில் இருப்பேன். இருக்கிற வரை நல்ல சினிமா மட்டும்தான் எடுப்பேன்!" என்று பதிலளித்துள்ளார்.

இளையராஜா
''இளையராஜாவின் இசைக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்காததால்தான், அவர் இந்தப் படத்துக்கு இசையமைக்காமல் ஒதுங்கிக் கொண்டாரா?, என்ற இன்னொரு கேள்விக்கு,
"ஏதோ ஒரு கிசுகிசு எழுதணுமேனு எழுதிட்டு, பசிக்க ஆரம்பிச்சதும் சாப்பிடப் போயிடுறாங்க. நானும் என் அப்பா இளையராஜாவும் ஒரு ரூமுக்குள்ள உட்கார்ந்து பேசினதை அவங்க கேட்டுட்டு இருந்த மாதிரி சொல்றாங்களே! அப்படி எல்லாம் எதுவும் நடக்கலை. இசைஞானிகிட்ட, 'ஒரு சின்னப் பையன்கூட வேலை செய்யப்போறேன்'னு சொன்னேன். அவரும் 'சரி'னு சொன்னார்," என்று கூறியுள்ளார்.

மிஷ்கின் நடிக்கல..
இந்தப் படத்தில் மிஷ்கின் நடிக்கவில்லையாம். ஏன் என்று கேட்டதற்கு, 'நான் நடிச்சா யாரும் தயாரிக்க முன்வரமறுக்கிறாங்க," என்று கூறியுள்ளார் மிஷ்கின். புதுமுகங்களை வைத்தே இந்தப் படத்தை எடுக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











