கோயிலுக்குப் போகாதீங்க.. சினிமாவுக்கு போங்க.. வெங்காயம் வெட்டிட்டே பார்ப்பீங்களா.. மிஷ்கின் பேச்சு!

சென்னை: சாய் தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள தி ப்ரூஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய மிஷ்கின் கோயிலுக்குப் போகாதீங்க தியேட்டருக்கு போங்க என பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. கோயிலுக்கு போனாலாவது மனநிம்மதி கிடைக்கும் தியேட்டருக்கு சென்றால் சமீப காலமாக வெளியாகும் சொதப்பல் படங்கள் காரணமாக பிபி தான் எகிறுது என ரசிகர்கள் மிஷ்கினை ட்ரோல் செய்து வருகின்றனர்.

சினிமாவில் எல்லாம் அறிந்த இயக்குநராக மிஷ்கின் சுழன்று கொண்டிருக்கிறார். சமீப காலமாக அவர் இயக்கும் படங்கள் பெரிதாக ஓடாமல் ஃபிளாப் ஆகி வந்த நிலையில், மாவீரன், லியோ என வரிசையாக நடிக்க ஆரம்பித்து விட்டார். இந்த ஆண்டு அவரது தம்பி இயக்கத்தில் மிஷ்கின் இசையில் வெளியான டெவில் திரைப்படம் பெரிதாக ஓடவில்லை.

Mysskin says don t go to temple at The Proof audio launch

இந்நிலையில், ராதிகா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகி உள்ள சிறு பட்ஜெட் படமான தி ப்ரூஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சினிமா குறித்து பல விஷயங்களை பேசிய மிஷ்கின் கோயிலுக்கு போகாதீங்க என சொல்லியிருக்கிறார்.

வாடிவாசல் பெரிய படமாக வரும்: வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல் திரைப்படம் டிராப் ஆகி விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், அதெல்லாம் கிடையவே கிடையாது வாடிவாசல் மிகப்பெரிய படமாக வரும். அந்த படத்தின் கதையை வெற்றிமாறன் சொன்னதும் மிரண்டு போய் விட்டேன். சிறந்த நடிகராக திகழும் சூர்யா வாடிவாசல் படத்துக்குப் பிறகு லெஜண்ட்டாக மாறிவிடுவார் என்றார் மிஷ்கின்.

கோயிலுக்கு போகாதீங்க: மேலும், தொடர்ந்து சினிமா பற்றி பேசிய மிஷ்கின் ஒரு கட்டத்தில் கோயிலுக்குப் போகாதீங்க தியேட்டருக்கு போங்க என பேசியது தற்போது சோஷியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. வீட்ல வெங்காயம் வெட்டிக்கிட்டே படத்தை பார்ப்பீங்களா, புருஷன் கூட சண்டை போட்டுக்கிட்டே படத்தை பார்ப்பீங்களா? புது டிரெஸ் போட்டு பர்ஃப்யூம் அடித்துக் கொண்டு காரில் ஜம்முன்னு தியேட்டருக்கு சென்று பாப்கார்ன் வாங்கிக் கொண்டு படத்தை அப்படி பார்க்க வேண்டும் என மிஷ்கின் சினிமாவை எப்படி பார்க்க வேண்டும் என பேசியுள்ளார்.

சிவனை பார்த்துருக்கீங்களா?: என்னைக்காவது சிவனை பார்த்து இருக்கீங்களா? என்னை பொறுத்தவரையில் சிவாஜி கணேசன் தான் சிவன். அவர் நடிப்பில் தான் சிவனை பார்த்திருக்கிறேன். கோயில் உங்களுக்கு எதுவும் தராது. தியேட்டரில் சந்தோஷமாக சிரித்துக் கொண்டும், உணர்ச்சி பூர்வமான படங்களை அழுது கொண்டும் கொண்டாட்டத்துடன் பார்க்கலாம் என பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X