ஆண்ட்ரியாவின் நிர்வாணம்.. எனக்கு நடந்த துரோகம்..ரூமுக்குள் வைத்து மிரட்டினார்கள்.. மிஷ்கின் உருக்கம்
சென்னை: பாட்டல் ராதா படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் மிஷ்கின் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு நடிகர் அருள்தாஸ், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், இயக்குநர் லெனின் பாரதி, பாடலாசிரியர் தாமரை உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று பேட் கேர்ள் படத்தின் விழாவில் மிஷ்கின் பகிரங்க மன்னிப்பு கேட்டார். அப்போது அவர் பேசியது ரசிகர்களிடையே உச்சக்கட்ட ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது.
மிஷ்கினின் படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவர் இயக்கிய சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, பிசாசு, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்கள் பெரிய வரவேற்பை பெற்றவை. அதேசமயம் அவர் இயக்கிய படங்கள் எல்லாமே வெளிநாட்டு படங்களிலிருந்து அப்பட்டமாக காப்பியடிக்கப்பட்டவை என்ற விமர்சனமும் உண்டு. அதேசமயம் அவர் அப்படியே காப்பியடிக்கமாட்டார்; அந்தப் படங்களின் இன்ஸ்பிரேஷனில்தான் தன்னுடைய படங்களை தனது ஸ்டைலில் உருவாக்குவார் என்று அவரது ரசிகர்கள் கூறுவதுண்டு.

நடிகராக மிஷ்கின்: இயக்கத்தில் மட்டும் கவனம் செலுத்திவந்த அவர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸ், மாவீரன், லியோ, வணங்கான் என வரிசையாக நடித்தார். இயக்கத்தை போலவே நடிப்பிலும் தனக்கான அடையாளத்தை பெற்றிருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவர் இப்போது விஜய் சேதுபதியை வைத்து ட்ரெய்ன் படத்தை இயக்கிவருகிறார். அந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.
சர்ச்சை மிஷ்கின்: இது ஒருபக்கம் இருக்க பட விழாவில் மிஷ்கின் மைக்கை பிடித்தால் அவரை சர்ச்சைகளும் பிடித்துக்கொள்ளும். அந்தவகையில் சமீபத்தில் பாட்டல் ராதா படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது சர்ச்சையை சம்பாதித்தது. சில இடங்களில் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்திய அவர்; இளையராஜாவை ஒருமையில் பேசினார். அதுமட்டுமின்றி மது குடிக்கும் பழக்கம் குறித்தும் கொஞ்சம் ஓவர் டோஸாகவே பேசினார்.
வலுத்த கண்டனங்கள்: அவரது பேச்சு கண்டனங்களை சம்பாதித்தது. அவருக்கு எதிராக நடிகர் அருள்தாஸ், இயக்குநர் லெனின் பாரதி உள்ளிட்டோர் கண்டனத்தை முன்வைத்தார்கள். இப்படிப்பட்ட சூழலில் நேற்று பேட் கேர்ள் படத்தின் விழா நடந்தது. இப்படத்தை வெற்றிமாறனும், அனுராக் காஷ்யப்பும் தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தின் விழாவில் மிஷ்கினும் கலந்துகொண்டு தனக்கு எதிராக பேசியவர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கோருவதாக ஓபனாக பேசினார்.
மிஷ்கின் கொடுத்த ஷாக்: அப்போது மிஷ்கின் பேசுகையில், "பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியாவை நிர்வாணமாக நடிக்க வைக்க முடிவு செய்தேன். அதற்கான ஃபோட்டோ ஷூட் எடுக்க எனது உதவி இயக்குநர் ஈஸ்வரி என்பவரை அனுப்பினேன். அந்த ஃபோட்டோ ஷூட் நடக்கும்போது நான் வெளியே வந்து சிகரெட் பிடித்துவிட்டு எனது ஆஃபிஸுக்கு வந்துவிட்டேன். பிறகு ஆண்ட்ரியாவிடம் ஃபோன் செய்து, உனது நிர்வாண போஸை நான் படத்தின் போஸ்டரில் வைத்தேன் என்றால்; எல்லோரும் என்னை போல் அந்த நிர்வாணத்தை இலக்கிய நயத்தோடும், தாய்மை உணர்வோடும் பார்ப்பார்களா என்று தெரியாது. விரசமாகத்தான் பார்ப்பார்கள். அதனால் இது வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
ரூமுக்குள் வைத்து மிரட்டல்: அந்த நிர்வாண போஸை பயன்படுத்தியிருந்தால் படத்துக்கு கூட்டமும் வந்திருக்கும். படமும் ரிலீஸாகியிருக்கும். ஆனால் நான் அப்படி செய்யவில்லை. அப்படிப்பட்டவன் நான். அதேபோல் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் சேனல் ரைட்ஸை பெரிய தொகைக்கு விற்று தருகிறேன் என்று சொல்லி ஒரு பெரிய இயக்குநர் என்னை அழைத்து சென்றார். ஒரு ரூமுக்குள் சென்றதும் 75 லட்சம் ரூபாய்க்கு அதை கேட்டார்கள். நான் 2 கோடி ரூபாய் கேட்டேன். உள்ளே 20 தடியர்கள் இருந்தார்கள். என்னை மிரட்டி அந்த அக்ரிமென்ட்டில் கையெழுத்து வாங்கினார்கள். உடனே நான் அந்த செக்கை கிழித்துப்போட்டு நான் கஷ்டப்பட்டுதான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். மீண்டும் கஷ்டப்பட்டு வென்றுக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். எனக்கு துரோகம் செய்த இயக்குநர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications











