Mysskin - விஜய் என் கழுத்தை பிடித்து லிப்ட்டில் தள்ளினார் - மிஷ்கின் பகிர்ந்த தகவல்

சென்னை: Mysskin (மிஷ்கின்) விஜய் தன் கழுத்தை பிடித்து லிப்ட்டில் தள்ளியதாக இயக்குநர் மிஷ்கின் கூறியிருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், அர்ஜுன், மாத்யூ தாமஸ் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். சென்னையில் இதன் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சமீபகாலமாக இயக்கத்தை குறைத்து நடிப்பில் ஆர்வம் காட்டும் மிஷ்கின் முதல்முறையாக விஜய்யுடன் இணைந்திருப்பதால் ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர்.

Mysskin Shares his Memories with vijay during Youth Movie

யூத்தில் நிகழ்ந்த கூட்டணி: மிஷ்கின் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். விஜய் நடித்த யூத் படத்தை இயக்கியவர் வின்சென்ட் செல்வா என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தில் இடம் பெற்ற ஆல்தோட்ட பூபதி பாடலிலும் மிஷ்கின் தோன்றுவார். அதுமட்டுமின்றி அந்தப் பாடலின் சில பகுதிகளை மிஷ்கினே ஷூட்டும் செய்திருந்தார்.அப்போதிலிருந்தே விஜய்க்கும் மிஷ்கினுக்கும் நல்ல நட்பு இருந்து வருகிறது.

மிஷ்கின் பேட்டி: இந்நிலையில் விஜய் குறித்து மிஷ்கின் கொடுத்திருக்கும் பழைய பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் கொடுத்திருக்கும் பேட்டியில், நான் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக இருந்தபோது ஆறுமாதம் விஜய்யிடம் நான் எதுவுமே பேசவில்லை. பின்னர் ஆறு மாதம் கழித்து என் கழுத்துக்கு பின்னால் மாதம் கழுத்தை பிடித்து ஏன் அண்ணா என்னிடம் பேசவே மாட்டேங்கிறீங்க என்று கேட்டார். அதற்கு நான் உங்களை நான் ஒரு கதையோடு தான் சந்தித்து பேசவேண்டும் என்று கூறினேன்.

கழுத்தை பிடித்து தள்ளினார்: அதன் பின்னர் நான் சித்திரம் பேசுதடி படத்தை எடுத்து முடித்து விட்டு விஜய்க்கு அதை போட்டுக் காண்பித்தேன். அப்போது லிப்டில் சென்று கொண்டிருக்கும்போது இந்தக் கதையை உங்களுக்காகத்தான் முதலில் எழுதினேன் என்று சொன்னேன். அதற்கு விஜய் என் கழுத்தை பிடித்து இழுத்து என்னை லிப்டில் தள்ளி அப்புறம் ஏன் என்னிடம் வந்து சொல்லவில்லை என கேட்டார்.

Mysskin Shares his Memories with vijay during Youth Movie

18 சீன மாத்திருப்பீங்க: அதற்கு உடனே நான், உங்க அப்பா ஒரு 18 சீன் மாத்தி இருப்பாரு, நீங்க ஒரு 18 சீன் மாத்தி இருப்பீங்க. அதைப் பார்த்து நான் தற்கொலையே பண்ணி இருப்பேன். அதான் வேண்டாம் என்று விட்டுவிட்டேன். அதன் பின்னர் நான் வெவ்வேறு படங்களை இயக்க ஆரம்பித்துவிட்டேன்.

கமல் சாரை மனதில் வைத்து எழுதிய கதை விஜய்க்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த கதை பௌத்தரை பற்றிய கதை அது மிகவும் வரலாற்று சிறப்புமிக்க கதையாக இருக்கும். இப்போது இல்லை என்றாலும் இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் விஜய்க்கு அந்த கதையை சொல்வேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X