சரக்கு போட்டுட்டா பேசுகிறேன்.. அப்படி பேசினால் பொறுத்து போங்கள்.. மிஷ்கின் நச் ஸ்பீச்
சென்னை: இயக்குநர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய அத்தனை படங்களும் ஏதோ ஒருவகையில் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தவை. அவர் தற்போது ட்ரெய்ன் படத்தை இயக்கிவருகிறார். அதுமட்டுமின்றி நடிகராகவும் கலக்கிவரும் அவர் இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்திலும் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வாழை படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் அவர் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.
வின்செண்ட் செல்வாவிடம் உதவி இயக்குநராக இருந்த மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்தின் இயக்குநராக அறிமுகமானார். நரேன், பாவனா உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படம் ஆஹா ஓஹோ அளவுக்கு ஹிட் இல்லை என்றாலும் மிஷ்கினுக்கும் அவரது திரை மொழிக்கும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதனையடுத்து அவர் இயக்கிய அஞ்சாதே திரைப்படம் மெகா ஹிட்டானது. அந்தப் படத்துக்கு பிறகு மிஷ்கின் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் என்ற வரிசையில் இணைந்தார்.

முகமூடி மிஷ்கின்: மிஷ்கின் மிகவும் எதிர்பார்த்து செய்த படம் முகமூடி. எதார்த்த வாழ்க்கையிலிருந்து ஒரு சூப்பர் ஹீரோ என்ற ஒன்லைனை அடிப்படையாக வைத்து அந்தப் படம் உருவாகியிருந்தது. ஜீவா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மிஷ்கின் பேசிய பேச்சுக்கும், படத்துக்கும் துளிகூட சம்பந்தமே இல்லை என்றும் ரசிகர்கள் வெளிப்படையாகவே விமர்சித்தனர்.
பிசாசு: பேய் படங்கள் என்றாலே திகிலும், படபடப்பும் நிறைந்த காட்சிகள் என்ற டெம்ப்ளேட்டை உடைத்தவர் மிஷ்கின். அவர் இயக்கிய பிசாசு படத்தை பார்க்கும்போது பயம் வருவதற்கு பதிலாக அந்த பேய் மீது இரக்கமும், காதலும் வரும். அந்த அளவுக்கு படத்தை செதுக்கியிருப்பார். அடுத்ததாக அவர் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார். ஆனால் படம் வெளியாகவில்லை. இப்போது அவர் ட்ரெய்ன் படத்தை இயக்கிவருகிறார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார்.
எனது சுயசரிதை எல்லாம் எடுக்க முடியாத பருவம்.. நெல்சன் திலீப்குமார் ஓபன் டாக்
மிஷ்கின் பேச்சு: இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வாழை படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின், “கொட்டுக்காளி, வாழை ஆகிய இரண்டு படங்களுமே முக்கியமான படங்கள். தமிழ்நாட்டை உணர வேண்டும் என்றால் வாழை படத்தை பாருங்கள். 6 வயது குழந்தையிடமும், 8 வயது குழந்தையிடமும்தான் எப்போதும் உண்மை இருக்கும். அதனை மாரி செல்வராஜ் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். எப்போது அம்மா, அக்கா, தங்கை இவர்களை தாண்டி இன்னொரு உறவு என்றால் டீச்சர்தான். இந்தியாவிலேயே ஒரு டீச்சருக்கும், குழந்தைக்கும் உள்ள உறவை மாரி அழகாக கொண்டு வந்திருக்கிறார்.
டீச்சரே இல்லையா: ஆனால் என்ன ஒரு வருத்தம் என்றால் டீச்சரை மலையாளத்திலிருந்துதான் கூட்டி வந்திருக்கிறார். தமிழ்நாட்டில் டீச்சரே இல்லை போல. அதேசமயம் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தவர் (நிகிலா விமல்) அருமையாக நடித்திருக்கிறார். கலையரசனும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். மெக்சிகோவில் வாழை இருந்தால் அங்கு இருப்பவர்களும் இந்தப் படத்தை தங்களோடு கனெக்ட் செய்துகொள்வார்கள்.
நாகரிக பேச்சு: கொட்டுக்காளி பட விழாவில் நான் பேசியதை பலரும் கிண்டல் செய்தார்கள். நான் ரொம்பவே சந்தோஷமாகவும், வருத்தமாகவும் இந்த மேடையை விட்டு இறங்குகிறேன். ஏனெனில் யாருக்கும் எந்த கன்டென்ட்டும் கொடுக்கவில்லை. இந்த மேடையில்தான் நான் நாகரிகமாக பேசியிருக்கிறேன். நான் சரக்கு அடித்துவிட்டு பேசுவதாக சொல்கிறார்கள். ஆனால் சரக்கு அடிப்பதை விட்டு இப்போது ஒர்க் அவுட் செய்துகொண்டிருக்கிறேன். கண்டிப்பாக சிக்ஸ் பேக் வைத்த இயக்குநராக மாறுவேன்” என்றார்.


Click it and Unblock the Notifications











