Mysskin: கெட்ட வார்த்தை பேச மாட்டேன்னு சொன்ன மிஷ்கின்.. அடுத்த நிமிடமே வந்து விழுந்த ஆபாச வார்த்தை!
சென்னை: இயக்குநர் மிஷ்கின் கடந்த மாதம் ரிலீஸ் ஆன பாட்டில் ராதா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது, ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி தனது உரையை பேசினார். அவரது பேச்சு பலருக்கு அதிர்ச்சி அளித்தது. இன்னும் சொல்லப்போனால், அவரது பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்தன. இதனால் அந்த நிகழ்வு நடைபெற்று அடுத்த வாரத்தில், நடைபெற்ற பேட் கேர்ள் படத்தின் டீசர் ரிலீஸில் தனது பேச்சு தொடர்பாக மன்னிப்பு கேட்டார். இப்படியான நிலையில், டிராகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மிஷ்கின் கெட்ட வார்த்தை பேச மாட்டேன் எனக் கூறிவிட்டு, உடனே கெட்ட வார்த்தை பேசினார். இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர், வி.ஜே. சித்து, ஹர்ஷத், கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா உள்ளிட்ட பலர் நடித்து உருவான படம் டிராகன். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று அதாவது, பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற்றது. இதில் பலரும் கலந்து கொண்டு படம் குறித்து பேசினார்கள்:. படம் வரும் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. படத்தில் மிஷ்கின் வில்லனாக நடித்துள்ளார்.

ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மிஷ்கின் தனது அதிரடியான பேச்சால், அனைவரையும், அதிர வைத்தார். குறிப்பாக அவர் பேசும்போது, நான் பாட்டில் ராத நிகழ்ச்சிக்குப் பின்னர் சுமார் ஒரு ஆண்டிற்கு எந்த மேடையிலும் கலந்து கொள்ளக் கூடாது என இருந்தேன். (அதைப் பேசும் போது ஆங்கிலத்தில் ஒரு கெட்ட வார்த்தை மிஷ்கின் பயன்படுத்தினார்) ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மூன்று பேர்தான் காரணம். ஒன்று அகோரம் சார். அஸ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் ஆகிய மூன்று பேருக்காகவும் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்.
மிஷ்கின்: பிரதீப் ரங்கநாதன், தமிழ் சினிமாவின் ப்ரூஸ்லீ. மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர், தமிழ் சினிமாவில் இளம் நட்சத்திரத்தைப் பார்த்தேன் என்றால் அது பிரதீப் தான். இன்னும் சண்டை படம் எதுவும் செய்யவில்லை. ஆனால் விரைவில் சண்டை படம் செய்வார் என நினைக்கிறேன். இந்தப் படத்தில் நான் பிரதீப்புக்கு வில்லனாக நடித்து உள்ளேன். நல்ல வில்லனாக நடித்து உள்ளேன்.
வெங்காயம்: இயக்குநர்களுக்கு மிகவும் சௌகரியமான நடிகராக உள்ளார். நான் பிரதீப்பை ஐஸ் வைக்கவில்லை. டே பிரதீப் நீ எனக்கு ஒரு வெங்காயமும் கொடுக்க வேண்டாம். எனது உதவி இயக்குநர்களிடம் பிரதீப் குறித்து பேசும்போது, எனது உதவி இயக்குநர்கள் என்னிடம், என்ன சார் அவனைப் பத்தி இப்படி பேசறீங்க, அவன் என்ன பெரிய வெங்காயமா? எனக் கேட்பார்கள். நான் உடனே அவன் பெரிய வெங்காயம் தான் எனக் கூறுவேன். இப்போது இருக்கும் குணத்துடன் இன்னும் 50 ஆண்டுகள் என்றாலும் இரு, உனக்கு வெற்றிகள் குவிந்து கொண்டு இருக்கும் என பேசினார்.
அஸ்வத் மாரிமுத்து: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து குறித்து பேசுகையில், அர்ப்பணிப்பான இயக்குநர்களில் அஸ்வத் மாரித்துவும் ஒருவர். ஷூட்டிங்கில் பல டேக்குகள் வாங்கிக் கொண்டே இருந்தார். நடப்பதில் தொடங்கி, கை அசைப்பது வரை பல டேக்குகள் வாங்கினார். ஷூட்டிங்கில் தான் இப்படி, டப்பிங்கில் தப்பித்துக் கொள்ளலாம் என நினைத்தேன், ஆனால் டப்பிங்கில், பால் டேக்குகள் வாங்கினார். இந்தப் படம் அசால்ட்டாக வெற்றி பெறும். இந்தக்கால இளைஞர்களுக்கு என்ன சொல்லனுமோ அதை சிறப்பாகவும், ஜாலியாகவும் சொல்லியுள்ளர்” என பேசினார். மிஷ்கின் பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதேநேரத்தில் கெட்ட வார்த்தை பேச மாட்டேன் எனக் கூறிவிட்டு, உடனே கெட்ட வார்த்தை பேசிட்டாரே என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











