மிஷ்கினின் பிசாசு 2...பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு !
சென்னை: பிசாசு படத்தின் முதல் பாகம் 2014 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் நாகா, பிராயகா மார்ட்டின், ராதாரவி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்தது.
இந்த படத்தை இயக்குனர் பாலா தயாரித்து இருந்தார். அருள் முருகன் இசை அமைத்திருந்தார்.
பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் மிஷ்கின் இயக்க கார்த்திக் ராஜா இசை அமைப்பதாக முன்னர் அறிவிப்பு வந்தது. இதனையடுத்து பிசாசு 2 பூஜையுடன் தொடங்கியுள்ளது.

சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்குமா
சில மாதங்களுக்கு முன்னர் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பின் போது படத்திற்காக சொன்னதை விட அதிகம் செலவு செய்ததாக அந்த படத்தின் நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் மிஷ்கினை அந்த படத்தில் இருந்து விலக்கினார். அதனால் பெரும் சிக்கலை சந்தித்த மிஷ்கின் பிசாசு 2 படத்தின் மூலம் தீர்வு காண்பாரா என திரையுலக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

ஆண்ட்ரியா உடன் கூட்டணி
துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு மிஷ்கினின் அடுத்த படத்தினை பற்றிய எதிர்பார்ப்பு பெரு வாரியாக இருந்தது. அடுத்தது பிசாசு2 என்று மிஷ்கின் எழுத தொடங்கி நடிகை ஆண்ட்ரியாவை படத்திற்கு தேர்வு செய்ய ரசிகர்களிடையில் உற்சாகம் பெருக்கெடுத்தது. துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு மிஷ்கினின் அடுத்த படத்தினை பற்றிய எதிர்பார்ப்பு பெரு வாரியாக இருந்தது. அடுத்தது பிசாசு2 என்று மிஷ்கின் எழுத தொடங்கி நடிகை ஆண்ட்ரியாவை படத்திற்கு தேர்வு செய்ய ரசிகர்களிடையில் உற்சாகம் பெருக்கெடுத்தது.

சூப்பர் சிங்கர் பிரியங்கா
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தன்னுடைய குரலின் மூலம் பலரை கவர்ந்தவர் பிரியங்கா. இந்த நிலையில் இயக்குனர் மிஷ்கின் பிசாசு2 படத்தில் ஒரு பாடலை பாடும் வாய்ப்பை பிரியங்காவுக்கு கொடுத்துள்ளார். பாடலின் பதிவை முடித்த பிறகு பிரியங்காவிற்கும் அவருடைய பெற்றோருக்கும் நன்றி கூறி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார் மிஷ்கின்.

ஒரே கட்டமாக முடிக்க திட்டம்
பிசாசு - 2 திரைப்படம் பூஜையுடன் துவங்கி உள்ளது. Rockfort Entertainment இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கி ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











