துள்ளி விளையாடு படத்திற்காக பாடிய மிஷ்கின்!

By Shankar

 Mysskin
விஜய் நடித்த ப்ரியமுடன், யூத், முரளி நடித்த வாட்டாக்குடி இரணியன், ஜித்தன், பெருமாள் போன்ற படங்களை இயக்கிய வின்சென் செல்வா அடுத்து இயக்கும் துள்ளி விளையாடு படத்துக்காக பின்னணி பாடினார் இயக்குநர் மிஷ்கின்.

'துள்ளி விளையாடு' படம் ஒரு காமெடி த்ரில்லர். படத்தின் நாயகனாக யுவராஜ் - நாயகியாக தீப்தி அறிமுகமாகிறார்கள்.

இவர்களுடன் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வின்சென்ட் செல்வா படத்தில் பிரகாஷ் ராஜ் நடிப்பது இதுதான் முதல் முறை.

ஜெயபிரகாஷ், சூரி, சிங்கமுத்து, சென்ராயன் (ரவுத்திரம் - வில்லன்) சூப்பர்குட் லஷ்மண், மதுரை சுஜாதா (நாடோடிகள்) மதன்பாபு என பிரபலங்கள் கைகோர்த்துள்ளனர்.

இந்தப் படத்தை ஆர்பி ஸ்டுடியோஸ் சார்பில் கோவிந்தராஜ் தயாரிக்கிறார். எஸ்கே பூபதி ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

துள்ளி விளையாடு படத்தில் இயக்குனர் மிஷ்கின் ஒரு பாடல் பாடியுள்ளார்.
அம்மாடி ஆத்தாடி -இவா
வாலில்லா காத்தாடி டோய்
கையாள மை பூசுறா-அவா
கண்ணால பொய் பேசுறா..

என்று தொடங்குகிறது அந்தப் பாடல். வின்சென்ட் செல்வாவின் உதவியாளராக இருந்தவர்தான் மிஷ்கின் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இயக்குநர் வின்சென்ட் செல்வா கூறுகையில், "என்னோட எல்லா படங்களிலும் எனது உதவியாளராக இருக்கும்போது ட்ராக் பாடுவது ராஜா (மிஷ்கின்) தான்.

யூத், ஜித்தன் போன்ற படங்களில் இவர் பாடிய ட்ராக் தான் பின்னர் பாட்டானது. முகமூடி படபிடிப்பில் பிசியாக இருந்தபோது ஒரு குத்துப் பாட்டு இருக்கு.. பாடமுடியுமான்னு கேட்டபோது எங்க டைரக்டர் கூப்பிடுறார்ன்னு ஓடி வந்து பாடிக் கொடுத்தார் மிஷ்கின். யுவராஜ், வெண்ணிலா கபடிக்குழு சூரி, சென்றாயன் ஆகிய மூன்று பேரின் அறிமுகப்பாடலாக இது படத்தில் இடம் பெறுகிறது.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அனுமதி வாங்கி படம்பிடித்தோம். செம ரகளையான இந்த பாடல் கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் பேருந்தில் திண்டுக்கல் சுற்றி வர படமாக்கப்பட்டது.

என்னுடைய 'ஒயிட் லக்கான் கோழி ஒண்ணு கூவுது', 'ஆல்தோட்ட பூபதி நானடா', 'அ முதல் அக்கு தானடா', வரிசையில் மிஷ்கின் பாடிய இந்த பாடலும் பட்டையைக் கிளப்பும். மிஷ்கினுக்கு நன்றி," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X