வணங்கானில் நடிக்கிறாரா மிஷ்கின்?.. என்ன நடக்கப்போகுதோ?

சென்னை: பாலா இயக்கும் வணங்கான் படத்தில் மிஷ்கின் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இயக்குநர்களில் ஒருவர் பாலா. விளிம்பு நிலை மனிதர்களையும், யாரும் கண்டுகொள்ளாத கதைக்களத்தையும் கையில் எடுத்து அதை ராவாக கொடுப்பவர். அவரது ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் வந்து படம் பார்ப்பவர்களை கலங்கவைக்கும். சேதுவிலிருந்து கடைசியாக வந்த நாச்சியார் படம்வரை அவரது பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

Mysskin Will Act In Balas Vanangaan Movie

பாலாவுக்கு பிரச்னைகள்: பாலாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்னைகள் வந்தன. அதன் காரணமாக அவரால் சினிமாவில் கவனம் செலுத்த முடியவில்லை என கூறப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் விக்ரம் ஆசைப்பட்டதற்கிண்டங்க அவரது மகன் துருவ்வை வைத்து அர்ஜுன் ரெட்டி படத்தை ரீமேக் செய்தார் பாலா. முழு படத்தையும் பார்த்த விக்ரமுக்கும், தயாரிப்பு தரப்புக்கும் திருப்தி இல்லாததால் பாலா இயக்கிய படத்தை கிடப்பில் போட்டார்கள். அது பாலாவின் கரியரில் பெரும் கரும்புள்ளியாகவே கருதப்பட்டது.

வணங்கான்: அதனையடுத்து தன்னை சிறந்த நடிகன் என்று அடையாளப்படுத்தியதற்காக பாலா இயக்கத்தில் கமிட்டானார் சூர்யா. படத்துக்கு வணங்கான் என்று பெயரிடப்பட்டது. நிச்சயம் இந்தப் படத்தின் மூலம் பாலா தரமான கம்பேக் கொடுத்து தான் யார் என்பதை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. படத்தின் ஷூட்டிங்கும் கிட்டத்தட்ட இரண்டு ஷெட்யூல்கள் முடிந்தன. ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டி நடிக்க கமிட்டானார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

விலகிய சூர்யா: ஆனால் படத்திலிருந்து விலகுவதாக சூர்யா திடீரென அறிவித்தார். ஷூட்டிங் ஸ்பாட்டில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் கருத்து வேறுபாடு எழுந்ததன் காரணமாகத்தான் சூர்யா விலகிவிட்டார் என கூறப்பட்டது. ஆனால் கதையில் ஏற்பட்ட சில மாற்றங்கள்தான் காரணம் என பாலா அறிக்கையில் வெளியிட்டு விளக்கமளித்தார். சூர்யா போனவுடன் கீர்த்தி ஷெட்டியும் விலகிவிட்டார்.

Mysskin Will Act In Balas Vanangaan Movie

அருண் விஜய்: இதனையடுத்து வணங்கான் படத்தில் அருண் விஜய் கமிட்டாகி நடித்துவருகிறார்.ஹீரோயினாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் நடந்துவருகிறது. விரைவில் ஷூட்டிங் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுளது. அந்தத் தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

படத்தில் மிஷ்கின்: அதன்படி சமீபகாலமாக நடிப்பில் கவனம் செலுத்திவரும் மிஷ்கின் வணங்கான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம். பாலாவுக்கு மிஷ்கின் நெருங்கிய நண்பர் என்பதும்; மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தை பாலாதான் தயாரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்தச் சூழலில் பாலா இயக்கத்தில் மிஷ்கின் நடிக்கவிருப்பது மகிழ்ச்சியான விஷயம்தான் என்றாலும் இரண்டு பேருமே கொஞ்சம் ஆக்ரோஷமான ஆட்கள். அப்படி இருக்கும்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏதும் பிரச்னை வராமல் இருந்தால் சரி எனவும் ரசிகர்கள் சிலர் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X