மீண்டு(ம்) வருகிறார் மிஷ்கின்.. அந்த பிரபல ஹீரோவுக்கு கதை சொல்லி எல்லாம் ஓகே ஆகிடுச்சாம்ல!
சென்னை: பாலா பவுன்ஸ்பேக் ஆகுறதுக்கு முன்னாடி மிஷ்கின் விழுந்த குதிரையை போல சட்டென எழுந்துவிட்டார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மிஷ்கின்.
நந்தலாலா படத்தின் மூலம் இயக்கம் மற்றும் நடிப்பு என இரண்டு குதிரைகளிலும் சவாரி பண்ண ஆரம்பித்த மிஷ்கின் தொடர்ந்து நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். மிஷ்கின் கடைசியாக இயக்கிய சைக்கோ படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்திருந்தார்.

விஷாலுடன் மோதல்
கடந்த 2017ம் ஆண்டு விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேல், வினய், ஆண்ட்ரியா நடிப்பில் துப்பறிவாளன் படத்தை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்தார் இயக்குநர் மிஷ்கின். அதன் இரண்டாம் பாகம் உருவாகி வந்த நிலையில், இயக்குநர் மிஷ்கின் மற்றும் நடிகர் விஷாலுக்கு நடுவே மிகப்பெரிய மோதல் வெடித்தது.

தூக்கி வீசப்பட்டார்
லண்டன் ஷூட்டிங் என அதிக அளவில் செலவு செய்ததாகவும், மேலும், படம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், தனக்கு 5 கோடி சம்பளம் வேண்டும் மற்றும் பல விதமான கண்டிஷன்களை மிஷ்கின் போட்டதால், கடுப்பான தயாரிப்பாளர் விஷால், துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து மிஷ்கினை வெளியேற்றியது கோலிவுட்டில் பெரிய பரபரப்பை கிளப்பியது.
Recommended Video

படம் பண்ணாதீங்க
மேலும், மற்ற தயாரிப்பாளர்களுக்கும், மிஷ்கினை வைத்து படம் பண்ண வேண்டாம் என்பதை மறைமுக கோரிக்கையாக நடிகர் விஷால் வைத்திருந்தார். பின்னர், அதுகுறித்து கண்ணாமூச்சி எனும் ஜி5 வெப்சீரிஸ் விழாவில் பேசிய மிஷ்கின், விஷாலை ‘பொறுக்கி' எனக் கூறி கண்டபடி விளாசித் தள்ளியிருந்தது மேலும் சர்ச்சையை கிளப்பியது.

ஓகே சொன்ன ஹீரோ
விஷாலுக்கு எல்லாம் பயப்படுற ஆளா, நான் என பேசிய மிஷ்கின், விழுந்த வேகத்தில் தற்போது மீண்டும் எழத் தொடங்கி இருக்கிறார். இந்த லாக்டவுன் சமயத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஒரு சூப்பரான கதையை மிஷ்கின் ஸ்கைப் காலில் கூறியிருப்பதாகவும், கதை பிடித்துப் போன அருண் விஜய், லாக்டவுன் முடிந்தவுடன் படம் பண்ணலாம் என சம்மதம் தெரிவித்திருப்பதாக தற்போது தகவல்கள் கசிந்து வருகின்றன.

எக்கச்சக்கம்
மிகவும் எதிர்பார்த்த மாஃபியா படம் அருண் விஜய்க்கு கலவையான விமர்சனங்களை கொடுத்து, பெரிய வெற்றியை பதிவு செய்யவில்லை. அடுத்ததாக சினம், அறிவழகன் இயக்கத்தில் ஏவி 31 மற்றும் நவீன் இயக்கத்தில் அக்னிச் சிறகுகள் என எக்கச்சக்க படங்களில் நடித்து வருகிறார். மாஃபியா 2 'டெக்ஸ்டர்' எனும் தலைப்பிலும் உருவாகும் என்பதை அவர் உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











