Mysskin - விஜய்யை இயக்குகிறாரா மிஷ்கின்.. அவர் சொன்ன பதிலை பாருங்க
சென்னை: Mysskin (மிஷ்கின்) லியோ படத்தில் இணைந்து நடித்ததைத் தொடர்ந்து விஜய்க்கு நெருக்கமாகியிருக்கும் மிஷ்கின் அவரை வைத்து படம் இயக்குவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.
இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர் என்று பெயர் எடுத்திருக்கும் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்க இரண்டாவது முறையாக கமிட்டாகியிருக்கிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் உருவான மாஸ்டர் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. எனவே மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்திருப்பதால் நிச்சயம் இந்தப் படமும் மெகா ஹிட்டாகும் என்று விஜய் ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர். அதுமட்டுமின்றி பீஸ்ட் தோல்வி, வாரிசு கலவையான விமர்சனம் என்பதால் இந்தப் படத்தின் ஹிட் விஜய்க்கும் தேவைதான்.

நட்சத்திர பட்டாளத்தை இறக்கிய லோகேஷ்: சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகுவதாக கூறப்படும் லியோ படம் பான் இந்தியா படமாகும். இதில் சஞ்சய் தத், த்ரிஷா, மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், அர்ஜுன், மாத்யூ தாமஸ், ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் படமானது அக்டோபர் மாதம் 19ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.
தளபதி 68:
இந்தப் படத்துக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். யுவன் ஷங்கர் இசையமைக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அந்த நிறுவனத்துக்கு இது 25ஆவது படமாக அமையவிருப்பது குறிப்பிடத்தக்கது. முதல்முறையாக வெங்கட் பிரபு - விஜய் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி இணையவிருப்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஜூன் 15ஆம் தேதி லியோ ஷூட்டிங் முடிய, ஜூன் 22ஆம் தேதி விஜய் 68 பூஜை போடப்படவிருப்பதாக கூறப்படுகிரது.
மிஷ்கின் பேட்டி:
இந்நிலையில் படத்தில் நடித்திருக்கும் இயக்குநர் மிஷ்கின் லியோ பற்றியும், விஜய் பற்றியும் பல பேட்டிகளில் பேசிவருகிறார். அவரது பேட்டி ரசிக்கப்பட்டாலும் எங்கே லியோவின் மொத்த கதையையும் சொல்லிவிடுவாரோ என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் குறித்து பேசுகையில், "யூத் படத்திற்கு பிறகு 20 வருடங்கள் கழித்து விஜய்யுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஒரு ஃபோன் கால் போதும்:
அவருடன் நான் நெருங்கி பழகியுள்ளேன். தற்போது ஒரே போன் காலில் அவரை சந்திக்க என்னால் அப்பாயிண்ட்மென்ட் வாங்க முடியும்.எனவே அவருக்கான சரியான கதையை தயார் செய்துவிட்டு அவரை சந்திப்பேன். கண்டிப்பாக அந்த கதை அவரை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும். அதற்கு சில வருடங்கள் ஆகும் என நினைக்கிறேன்" என்றார். ஏற்கனவே சித்திரம் பேசுதடி படத்தின் கதையை ஏன் தன்னிடம் கூறவில்லை என விஜய் என் கழுத்தை பிடித்தார் என் மிஷ்கின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மிஷ்கின் இயக்கத்தில் :
பிசாசு 2 படத்தை ஆண்ட்ரியாவை வைத்து இயக்கி முடித்திருக்கிறார் மிஷ்கின். ஆனால் படம் இன்னும் வெளியாகவில்லை. இதற்கு அடுத்ததாக விஜய் சேதுபதியை அவர் ஒரு படம் இயக்கவிருப்பதாகவும், அதற்கான கதை எழுதும் பணியில் இப்போது மிகவும் தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











