வணங்கான் படத்தில் வான்டட்டாக வந்து சிக்கும் லியோ பட நடிகர்.. பாலாவுக்கும் அவருக்கும் செட்டாகுமா?..
சென்னை: பாலாவின் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகினாலும் அந்த படம் தொடர்ந்து அதே பெயரில் உருவாகி வருகிறது. நடிகர் அருண் விஜய் நாயகனாக நடித்து வரும் வணங்கான் திரைப்படம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். இந்நிலையில், லியோ படத்தில் நடித்த பிரபல இயக்குநர் ஒருவரும் அந்த படத்தில் இணைந்துள்ளதாக ஹாட் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இயக்குநர் ஹரி உடன் அருவா படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்த நடிகர் சூர்யா அதிரடியாக அந்த படத்திலிருந்து விலகி இயக்குநர் பாலாவுடன் வணங்கான் படத்தில் இணைந்தார்.

வணங்கான் படத்தின் பாதி ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், நடிகரும் தயாரிப்பாளருமான சூர்யாவுக்கும் இயக்குநர் பாலாவுக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக படத்தில் இருந்து திடீரென விலகுவதாகவும் இனிமேல் அந்த படத்தை தயாரிக்கப் போவதில்லை என்றும் சூர்யா அறிவித்து விட்டார்.
நந்தாவில் நடிக்க வைத்த பாலா: நடிகர் சிவகுமாரின் மகனான சூர்யா தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமானாலும், ஆரம்ப காலத்தில் பல படங்களில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்ததில்லை. விக்ரமை எப்படி சேது படத்தின் மூலம் சிறந்த நடிகராக பாலா மாற்றினாரோ அதே போலத்தான் நந்தா படத்தின் மூலம் சூர்யாவையும் நல்ல நடிகராக உருவாக்கினார்.
அதன் பின்னர் சியான் விக்ரம் மற்றும் சூர்யா இருவருமே இணைந்து நடித்த பிதாமகன் படம் பற்றியும் அதில் சூர்யா நடித்த நடிப்பையும் பற்றி சொல்லவே தேவையில்லை. பல நடிகர்களை உருவாக்கிய இயக்குநர் பாலா சமீப காலமாக சொதப்பி வரும் நிலையில், வணங்கான் படத்தின் மூலம் சூர்யா வாய்ப்பு கொடுத்திருந்தார். ஆனால், சில காரணங்களுக்காக அந்த வாய்ப்பு பாதியிலேயே கை நழுவிப் போய்விட்டது.
வணங்கானில் இணைந்த மிஷ்கின்: சூர்யா, க்ரித்தி ஷெட்டி இருவரும் வணங்கான் படத்தில் இருந்து வெளியேறிய நிலையில், அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வணங்கான் படத்தில் லேட்டஸ்ட்டாக இயக்குநர் மிஷ்கின் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாலாவை போலவே ஜீனியஸ் இயக்குநரான மிஷ்கின் சமீப காலமாக மாவீரன், லியோ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், வணங்கான் படத்திலும் அவர் இணையப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
பாலாவுடன் செட்டாகுமா: மிஷ்கின் மற்றும் பாலா இருவருமே முரட்டுத்தனமான இயக்குநர்கள் என்பதால், இருவருக்கும் இடையே செட்டாகுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. மிஷ்கின் எதையாவது பேச இருவருக்கும் இடையே முட்டிக் கொண்டால் மீண்டும் ஒரு சர்ச்சை வணங்கான் படத்தை சுற்றும் என்றும் மிஷ்கினுக்கு பதில் இன்னொரு நடிகரை போட்டாலும் நேர விரையம் மற்றும் பணம் வீணாகும் என்றும் கூறுகின்றனர்.
ஆனால், இயக்குநராக அல்லாமல் நடிகராகவே மிஷ்கின் ஷூட்டிங் ஸ்பாட்டுகளுக்கு சென்று வருவதால் எந்தவொரு பிரச்சனையும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











