நான் விஜய்யை வைத்து படம் பண்ணா அவருக்கு இந்த ரோல் தான்.. ட்விட்டர் ஸ்பேஸில் மிஷ்கின் சரவெடி பதில்!
சென்னை: தளபதி விஜய்யின் பிறந்தநாளை ஒட்டுமொத்த சினிமா உலகமே நேற்று கொண்டாடி தீர்த்தது என்றே சொல்லலாம்.
ரசிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் முன்னணி நடிகைகள் பலரும் ஆட்டம் பாட்டத்துடன் தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.
இந்நிலையில், தற்போது டிரெண்டாகி வரும் ட்விட்டர் ஸ்பேஸில் இயக்குநர் மிஷ்கின் தளபதி விஜய் குறித்து பேசியிருப்பது வைரலாகி வருகிறது.

ரசிகர்களை மிஞ்சிய நடிகைகள்
தமிழ் சினிமாவில் இப்படியொரு பிறந்தநாள் விழா சமீப காலத்தில் கொண்டாடப்பட்டதாக தெரியவில்லை. அந்த அளவுக்கு சமூக வலைதளங்கள் முழுக்க நேற்று நடிகர் விஜய் மட்டுமே நிறைந்திருந்தார். நடிகை கீர்த்தி சுரேஷ், மாளவிகா மோகனன், அம்ரிதா உள்ளிட்ட பலரும் விஜய் பாடலுக்கு நடனமாடி ரசிகர்களையே மிஞ்சி விட்டனர்.

மிஷ்கினிடம் கேள்வி
ட்விட்டரில் புதிதாக டிரெண்டாகி வரும் ட்விட்டர் ஸ்பேஸில் கலந்து கொண்ட இயக்குநர் மிஷ்கினையும் விடாமல் ரசிகர்கள் தளபதி விஜய்யை வைத்து படம் இயக்குவீர்களா? என்றும், அப்படி படம் பண்ணா நடிகர் விஜய்க்கு என்ன ரோல் கொடுப்பீங்க என்றும் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

ஜேம்ஸ் பாண்ட்
ரசிகர்கள் கேள்விகளை அடுக்கிய நிலையில், கொஞ்சமும் யோசிக்காமல் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் தான் என சரவெடி பதிலை கூறியிருக்கிறார் மிஷ்கின். தமிழ் சினிமாவில் ஜேம்ஸ் பாண்டாக நடிக்க தளபதி விஜய் கரெக்டா இருப்பார் என்றும் இயக்குநர் மிஷ்கின் கூறியுள்ளது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.
Recommended Video

ஷெர்லாக் ஹோம்ஸ் ஸ்டைலில்
ஏற்கனவே ஷெர்லாக் ஹோம்ஸ் ஸ்டைலில் தான் துப்பறிவாளன் திரைப்படத்தை இயக்கி இருப்பார் இயக்குநர் மிஷ்கின். அதன் இரண்டாம் பாகத்தை இயக்கிக் கொண்டிருந்த நிலையில், நடிகர் விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் மிஷ்கின். இந்நிலையில், விஜய்யை வைத்து ஜேம்ஸ் பாண்ட் பட ஸ்டைலில் படம் இயக்கினால் துப்பறிவாளனை அந்த படம் தூக்கி சாப்பிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே யோகன்
இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் ஏற்கனவே உருவாக இருந்த யோகன் அத்தியாயம் ஒன்று படத்திலேயே நடிகர் விஜய்க்கு ஜேம்ஸ் பாண்ட் போன்ற கதாபாத்திரம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த படம் அப்படியே டிராப் ஆனது. விரைவில் விஜய்யை இயக்க கெளதம் மேனனும் போராடி வரும் நிலையில், மிஷ்கினும் தனது ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











