இதெல்லாம் உண்மைதானா? ஷூட்டிங்கில் தெறிக்கவிட்ட நிஜ பேய்.. அதிர்ச்சியில் ஹீரோயின்.. படக்குழு பதட்டம்!

By

சென்னை: பேய் காட்சியை படமாக்கும்போது நிஜ பேயை உணர்ந்ததாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

தமிழில், அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு உட்பட சில படங்களில் நடித்தவர், நந்திதா ஸ்வேதா.

தமிழ்த் தவிர, தெலுங்கு படங்களிலும் நடித்துவரும் நந்திதா, இப்போது நடிக்கும் படத்துக்கு, ஐபிசி 376 என்று டைட்டில் வைத்துள்ளனர். இது, பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டம்.

இரண்டு லுக்-கில் நந்திதா

இரண்டு லுக்-கில் நந்திதா

இந்தப் படத்தை ராம்குமார் சுப்பாராமன் இயக்குகிறார். இவர், இயக்குனர்கள் பிரபு சாலமன், பாலசேகரனிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்தவர். பவர் கிங் ஸ்டூடியோ சார்பில் எஸ்.பிரபாகர் தயாரிக்கிறார். தில்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் நடிகை நந்திதா ஸ்வேதா இரண்டு லுக்-கில் வருகிறார். அதில் ஒன்று போலீஸ் அதிகாரி வேடம்.

பேய் வருவது

பேய் வருவது

த்ரில்லர் படமாக உருவாகும் இதில், சூப்பர் சுப்பராயன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மகாநதி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங், சென்னை மற்றும் ஏலகிரியில் நடந்துள்ளது. ஏலகிரியில் ஒரு ரிசார்ட்டில் ஷூட்டிங் நடந்த போது பேய் வருவது போன்ற காட்சி எடுக்கப்பட்டுள்ளது.

ஷாக் கொடுப்பதற்காக

ஷாக் கொடுப்பதற்காக

ஹீரோயின் நந்திதா படுத்திருக்கும்போது ஏதோ சத்தம் கேட்கிறது. அவர் கதவை திறந்து பார்க்க வேண்டும், அப்போது அங்கு பேய் நிற்பது போன்ற காட்சியை படமாக்கவேண்டும். ஷாட் ரெடியானதும், நந்திதா எழுந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காதவாறு அறைக்குள் இருந்த பீரோ கதவு திடீரென தன்னால் திறந்தது. படக்குழு தனக்கு ஷாக் கொடுக்க இதை செய்திருப்பதாக நினைத்துக் கொண்டு, நந்திதா நடித்தார். ஆனால், காட்சி முடிந்ததும் தான் தெரிந்தது, அந்த பீரோ கதவு, தன்னால் திறந்தது என்று.

தன்னால் திறந்த கதவு

தன்னால் திறந்த கதவு

இதைக் கேட்டதும் நந்திதா ஷாக் ஆனார். இந்த அமானுஷ்ய சம்பவம் படக்குழுவினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் அடுத்தக் காட்சியில் நடிக்க, நந்திதா பயந்தார். தைரியம் கொடுத்து நடிக்க வைத்துள்ளனர். இதுபற்றி இயக்குனர் ராம்குமார் சுப்பாராமனிடம் கேட்டபோது, ' அது உண்மைதான். பேய் காட்சியில் நிஜ பேய் வந்தது போல நினைத்துக் கொண்டோம். நாங்களே எதிர்பார்க்காமல் அந்த பீரோ திறந்தது, அதிர்ச்சிதான்.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

அது அப்படியே விஷூவலாகவும் இருக்கிறது. பட ரிலீஸ் நேரத்தில் அந்த ஆச்சரியத்தைத் திரையிட்டு காட்ட இருக்கிறோம். இது பெண்களின் பெருமை பேசும் படம். த்ரில்லர், சஸ்பென்ஸ் என்பதைத் தாண்டி யூகிக்க முடியாத மற்றொரு விஷயமும் படத்தில் இருக்கிறது. பாலியல் வன்கொடுமைக்கு எதிரான படம். பெண்களுக்கு விழிப்புணர்வை கொடுக்கும் கதை. ஷூட்டிங் முடிந்துவிட்டது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X