2012ன் பாட்டு ராசா நா. முத்துக்குமார்தான்...!

By Sudha

தமிழ்த் திரையுலகில் 2012ம் ஆண்டின் பாட்டு ராசா யார் என்று கேட்டால் நா.முத்துக்குமாரின் பெயர்தான் முதலில் வருகிறது. கடந்த ஆண்டில் முத்துக்குமார் 103 பாடல்களை எழுதி அசத்தியுள்ளார்.

தன்னம்பிக்கைப் பாடலாகட்டும், குத்துப் பாட்டாகட்டும், துள்ளல் இசைப் பாடலாகட்டும், எதாக இருந்தாலும் விதம் விதமாக தருவதில் முத்துக்குமாருக்கு நிகர் அவர்தான்.

2012ம் ஆண்டில் வெளியான சூப்பர் ஹிட் படங்கள் அத்தனையிலும் முத்துக்குமாரின் பாட்டு முத்திரை பதிந்துள்ளது விசேஷமானது.

ஹார்ட்டிலே பேட்டரி

ஹார்ட்டிலே பேட்டரி

நண்பன் படத்தில் இடம் பெற்ற ஹார்ட்டிலே பேட்டரி, ஆல் இஸ் வெல் பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிய பாடலாகும். அதை முத்துக்குமார்தான் எழுதியிருந்தார்.

வேணாம் மச்சான் வேணாம்

வேணாம் மச்சான் வேணாம்

வேணாம் மச்சான் வேணாம் இந்தப் பொண்ணுங்க காதலு... இந்தப் பாடலும் பட்டி தொட்டியெங்கும் காதலர்களின் உள்ளங்களைத் தைத்த பாடல்தான். இதையும் முத்துக்குமாரின் பேனாதான் எழுதியது.

அம்மாவின் கை பேசிக்கும் முத்துக்குமார்

அம்மாவின் கை பேசிக்கும் முத்துக்குமார்

அதேபோல அம்மாவின் கைபேசி, சமர் என பல முக்கியப் படங்களுக்கும் நா. முத்துக்குமார் கடந்த ஆண்டு பாட்டு எழுதினார்.

என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்..

என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்..

கடந்த ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பான நீதானே என் பொன்வசந்தம் படப் பாடல்களையும் முத்துக்குமாரே எழுதியிருந்தார்.

34 படங்கள் - 103 பாடல்கள்

34 படங்கள் - 103 பாடல்கள்

2012ம் ஆண்டு மொத்தம் 34 படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார் முத்துக்குமார். பாடல்களின் எண்ணிக்கை 103 ஆகும். இது நிச்சயம் பெரிய சாதனைதான். விசேஷம் என்னவென்றால் கிட்டத்தட்ட அத்தனை பாடல்களுமே நல்ல ஹிட் என்பதுதான்.

எத்தனை விருதுகளோ...?

எத்தனை விருதுகளோ...?

2012ம் ஆண்டின் மெகா ஹிட் பாடலாசிரியர் என்ற பெருமையைப் பெற்றுள்ள முத்துக்குமாருக்கு எத்தனை விருதுகளைப் பெற்றுத் தரப் போகிறதோ அவர் எழுதிய பாடல்கள்...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X