நம்பிக்கை தந்த நாச்சியார் வசூல்!

By Shankar

Recommended Video

நாச்சியார் வசூல் விபரம்..!!

இந்த வருடம் ஜனவரி முதல் கடந்த வாரம் வரை ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில்எதுவும் சூப்பர் டூப்பர் வெற்றியை பெறவில்லை. சுநத்ர் சியின் கலகலப்பு 2 பரவாயில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை 1. நாகேஷ் திரையரங்கம், 2. வீரா, 3. மேல் நாட்டு மருமகன், 4. மனுஷனா நீ, 5. நாச்சியார் என ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகின.

Naachiyaar BO details

இவற்றில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடிக்க பாலா இயக்கி தயாரித்து வெளியான நாச்சியார் திரைப்படம் வசூல் சாதனை நிகழ்த்தும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தனர்.

அதற்கேற்ப வெள்ளிக்கிழமை வெளியீட்டில் நாச்சியார் தமிழ்நாடு முழுவதும் சுமார் 350 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.

சுமார் 10 கோடி வரை திரையரங்குகள், விநியோகஸ்தர்கள் தரப்பில் முதலீடு செய்யப்பட்டிருந்த நிலையில் தமிழ்நாடு உரிமையை படத்தின் பட்ஜெட்டிற்கு ஏற்ப 5.50 கோடிக்கு தயாரிப்பாளர் பாலா விற்பனை செய்திருந்தது விநியோகஸ்தர்களுக்கு தெரிய வந்ததது.

ஏரியா விலையை குறைக்க வேண்டும் என கூறி திருச்சி விநியோகஸ்தர் பேசிய விலையில் (1 கோடி) பணத்தை செட்டில் செய்ய மறுத்தததால் திருச்சி ஏரியாவில் நாச்சியார் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

இதனால் தமிழ்நாடு முழுவதும் விலை குறைக்கப்பட்டு படம் வெளியானது. முதல் நாள் பாலா படத்திற்கான குறைந்தபட்ச ஓபனிங் இருந்தாலும் அதிரி புதிரியான வசூல் தியேட்டர்களில் இல்லை.

சனி, ஞாயிற்று கிழமைகளில் தமிழ்நாடு முழுவதும் மோசமான வசூல் இல்லை. முதல் மூன்று நாட்களில் தமிழகத்தில் நாச்சியார் வசூலித்த தொகை சுமார் 4 கோடியே 69 லட்சம்.

நாச்சியாருடன் களமிறங்கிய மற்ற நான்கு படங்களும் மிக மோசமான வசூலைப் பெற்றன. வரும் நாட்களில் நாச்சியார் மட்டுமே தியேட்டர்களில் முதல் வாரத்தை நிறைவு செய்யும் என்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள். பிறபடங்கள் அது போன்று தொடர வாய்ப்பு இல்லை என்பதே சினிமா வட்டார தகவல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X