இவானா... கோலிவுட்டில் நம்பிக்கை தரும் புதுவரவு!
Recommended Video

மனதை அள்ளிய இவானா.. நழுவும் குரு பாலா..!!
நாச்சியார் மூலம் கோலிவுட்டில் அழுத்தமாகக் கால்பதித்துள்ளார் நடிகை இவானா. பாலாவின் அறிமுகம் என்ற பெருமையோடு வந்திருக்கும் இந்த இளம் பெண்ணுக்கு இப்போதே வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன.
அரசி என்ற பாத்திரத்தில் அச்சு அசலாக ஒரு விளிம்பு நிலைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாகத் தோன்றிய இவானா படம் முழுக்க ரசிகர்களின் மனங்களை அள்ளிக் கொண்டார்.

கடந்த ஆண்டு அருவி படத்தில் நடித்த அதிதி பாலனை சிறந்த புது வரவாகக் கொண்டாடிய மீடியாவின் கவனம் இப்போது இவானா பக்கம்.
பள்ளிச் சிறுமி போலிருக்கும் இவானாவுக்கு இப்போதே வாய்ப்புகள் கதவைத் தட்ட ஆரம்பித்துள்ளன. ஆனால் இதுவரை எந்தப் புதுப்படத்துக்கும் ஓகே சொல்லவில்லையாம். தனது குரு பாலாவிடம் யோசனை கேட்க, அவரோ நீயே பாத்து முடிவு பண்ணிக்க... என்கிட்ட ஏன் கேட்கற என்று கூறிவிட்டாராம்.
Comments


Click it and Unblock the Notifications