குதித்து குதித்து சண்டைப் போட்ட அஞ்சலி.. மீம்ஸ் போட்டு கலாய்த்த சசிகுமார்.. நாடோடிகள் 2 சீக்ரெட்ஸ்!
நாடோடிகள் 2 படத்தில் தனக்கு சண்டை காட்சிகள் இருப்பதாக நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.
சென்னை: நாடோடிகள் 2 திரைப்படம் தனது திரை வாழ்க்கையில் முக்கியமான படம் என்று நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி, பரணி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் நாடோடிகள் 2. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகம் இது.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை அஞ்சலி, இப்படத்தில் தனக்கு சண்டை காட்சிகள் இருப்பதாகக் கூறினார்.

அஞ்சலியின் கதாபாத்திரம்
"நாடோடிகள் முதல் பாகத்தின் ரசிகை நான். அதன் இரண்டாம் பாகத்தில் நடிக்க சமுத்திரக்கனி கேட்ட போது நான் மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்டேன். இந்த படத்தில் ஹீரோயின் கதாபாத்திரமும் வலுவாக இருக்கும்.

சசிகுமாரின் மீம்ஸ்
சமுத்திரக்கனி எனது குடும்ப உறுப்பினர் போன்றவர். தோழர் சசிகுமார் நிறைய மீம்ஸ் வைத்திருப்பார். தேவைப்படும் சமயத்தில் அதை வைத்து கலாய்ப்பார். இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். நிறைய நடனம் எல்லாம் ஆடி இருக்கிறார்.

சண்டை காட்சிகள்
இந்த படத்தில் எனக்கு சண்டை காட்சிகள் இருக்கிறது. ஸ்டண்ட் சில்வா மாஸ்டர் எனக்கு நிறைய பைடிங் சொல்லிக்கொடுத்தார். நானும் குதித்து குதித்து சண்டை போட்டேன். எல்லாமே சிறப்பாக வந்திருக்கிறது.

நிறைய பேருக்கு முக்கியமான படம்
இந்த படம் நான் உள்பட நிறைய பேருக்கு முக்கியமான படம். பரணி, பரத், அதுல்யா உள்பட அனைவரின் கதாபாத்திரமும் சூப்பராக இருக்கும்", என அஞ்சலி கூறினார்.


Click it and Unblock the Notifications











