twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருநங்கைகளின் வலியை சொல்லும் நாடோடிகள் 2 - சமுத்திரக்கனி

    |

    Recommended Video

    மேடையில் கண்கலங்கிய சமுத்திரக்கனி | Nadodigal 2 Audio launch | Samuthirakani Speech

    சென்னை: நாடோடிகள் 2 படத்தில் சமூகம் சார்ந்த பல விஷயங்களை வைத்திருக்கிறார். இதில் நமீதா என்ற திருநங்கை நடித்திருக்கிறார். அவர் மூலமாக திருநங்கைகளின் தினந்தோறும் சந்திக்கும் வேதனைகளை பதிவு செய்திருக்கிறார் சமுத்திரக்கனி என்று இயக்குநரும் நடிகருமான சசிகுமார் கூறியுள்ளார். நாடோடிகள் 2 படத்தில் ஆண் பெண் என் இரண்டையும் தாண்டி மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகள் பற்றியும் அவர்கள் படும் அவஸ்தைகள் பற்றியும் நமீதா என்ற திருநங்கையின் கதாபாத்திரம் வழியாக சொல்லியிருக்கிறேன் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் சமுத்திரக்கனி தெரிவித்தார்.

    நட்புக்காக எத்தனையோ நபர்கள் தங்களின் உயிரையும் கொடுத்துள்ளனர். இயக்குநர் சசிகுமார் மற்றும் இயக்குநர் சமுத்திரக்கனி ஆகிய இருவரும் இதை நன்கு உணர்ந்துகொண்டதால் தான் அவர்கள் எடுக்கும் படங்களிலும் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

    Naadodigal 2 Press Meet Samuthirakani speech

    இதை அவர்கள் தங்களின் முதல் படமான சுப்ரமணியபுரம் படத்திலேயே நிரூபித்திருந்தனர். இவர்களின் அடுத்த படமான நாடோடிகள் படத்திலும் அந்த நட்பு தொடர்ந்தது. அதில் நட்புக்காக காதலையே துறந்து தன்னுடைய உயிரையே பணயம் வைக்கும் கதாபாத்திரத்தில் சசிகுமார் கணகச்சிதமாக பொருந்தியிருந்தார். இவரோடு அனன்யா, அபிநயா, பரணி, விஜய் வசந்த் ஆகியோரும் நடித்திருந்தனர்.

    அதில் காதலுக்காக உயிரை பணயம் வைக்கும் நண்பர்கள் மற்றும் அவர்கள் மனதில் ஏற்படும் அழகிய காதல், அதனால் ஏற்படும் தோல்வி, காதல் தோல்வியால் ஏற்படும் வலி என அனைத்தையும் உணர்வு பூர்வமான கதையாக்கி வெற்றி கண்டார் இயக்குநர் சமுத்திரக்கனி.

    கடந்த 2008ஆம் ஆண்டு வெளியாக அபார வெற்றி பெற்றதையடுத்து, அதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆனால் அந்த படத்தில் சசிகுமாரின் நடிப்பை பார்த்து, அடுத்தடுத்து தொடர்ந்து நடிப்பதற்கே வாய்ப்புகள் வந்தவண்ணம் இருந்தன.

    இயக்குநர் சமுத்திரக்கனியும் அதே நிலையில் தான் இருந்தார். இந்த படத்திற்கு பிறகு தெலுங்கில் படத்தை இயக்கத் தொடங்கினார். பிறகு இருவரும் சேர்ந்து போராளி படத்தை தயாரித்தனர். தொடர்ந்து படங்களில் நடிப்பதிலும் சமுத்திரக்கனி பிசியானதால் இருவரும் இணைவதற்கு வாய்ப்பில்லாமல் போனது.

    இந்நிலையில் 11 ஆண்டு இடைவெளிக்கு பிறகு, ஒரு வழியாக தற்போது இருவரும் இணைந்து நாடோடிகள் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துவிட்டனர். இரண்டாம் பாகத்தில், சசிகுமாருடன் அஞ்சலி ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் அதுல்யா ரவி, பரணி, நமோ நாராயணா, ஞானசம்பந்தம், சூப்பர் சுப்பராயன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    சமுத்திரக்கனி இயக்கத்தில், ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பில், ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    இத்திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    இநநிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் சசிகுமார், சமுத்திரக்கனி, அஞ்சலி, அதுல்யா ரவி ஞானசம்பந்தம் உள்ளிட்ட முக்கிய சினிமா பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

    இதில் பேசிய நடிகரும் இயக்குநருமான சசிகுமார், என்னுடைய ஆத்ம நண்பரான சமுத்திரக்கனி சமூக சிந்தனையுள்ள இயக்குநர். நாடோடிகள் 2 படத்தில் சமூகம் சார்ந்த பல விஷயங்களை வைத்திருக்கிறார். இதில் நமீதா என்ற திருநங்கை நடித்திருக்கிறார்.

    அவர் மூலமாக திருநங்கைகளின் தினந்தோறும் சந்திக்கும் வேதனைகளை பதிவு செய்திருக்கிறார். இந்த சமுதாயம் எப்படியெல்லாம் திருநங்கைகளை ஒதுக்கி வைத்திருக்கிறது. அவர்களும் மனிதர்கள் தான். அவர்களுக்கும் உணர்வு இருக்கிறது என்பதை இந்த சமுதாயம் உணரவேண்டும்.

    இந்த படத்திற்கு பிறகு நிச்சயம், சமுதாயத்தில் திருநங்கைகள் மீது பெரிய மரியாதை ஏற்படும் என்று நெகிழ்ச்சியோடு பேசினார். மேலும் நாடோடிகள் முதல் பாகம் எந்த அளவிற்கு பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்ததாக இருந்ததோ, அதே விறுவிறுப்பும் பரபரப்பும் நாடோடிகள் பாகம் இரண்டிலும் நிச்சயம் உள்ளது என்றும் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

    அடுத்து பேசிய படத்தின் இயக்குநர் சமுத்திரக்கனி, ஆண் பால், பெண் பால் என்ற இரண்டையும் தாண்டி, மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகள் படும் அவஸ்தையை நாடோடிகள் 2 படத்தில் நமீதா என்ற திருநங்கையின் கதாபாத்திரம் வழியாக சொல்லியிருக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

    English summary
    At the press conference, director Samuthirakani said that in the film 'Naadodigal 2', male and female crossed over both the transgender and the plight of them.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X