சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக சிறுமியை சீரழித்த புகாரில் பிரபல டிவி நடிகர் கைது
மும்பை: நாகினி 3 தொடரில் நடித்துள்ள பிரபல டிவி நடிகர் பியர்ல் வி புரி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலிவுட் சினிமா உலகத்தை போலவே டிவி உலகமும் பல மர்ம கதைகள் நிறைந்ததாகவே உள்ளது.
சினிமா மற்றும் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்துள்ளதாக பியர்ல் வி புரி குற்றம்சாட்டப்பட்டுள்ளது இந்தி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிவி பிரபலம்
31 வயதாகும் பியர்ல் வி புரி இந்தியில் ஒளிபரப்பாகி வரும் பல டிவி தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். கடந்த 9 ஆண்டுகளாக டிவி தொடர்களில் நடித்து வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்களும் உள்ளனர். தில் கி நசர் சே குப்சூரத் எனும் தொடர் மூலம் கடந்த 2013ல் அறிமுகமானவர் இவர்.

நாகினி 3
இந்தியா முழுக்க ரசிகர்களை ஈர்த்த நாகினி சீரியலின் 3ம் பாகத்தில் இவர் நடித்துள்ளார். மேலும், நாகார்ஜுனா ஏக் யோதா, பேபனா பியார், பிரம்மரக்ஷாஸ் 2 உள்ளிட்ட ஏகப்பட்ட தொடர்களிலும் நடித்துள்ளார் பியர்ல் வி புரி. இன்ஸ்டாகிராமிலும் போட்டோக்களை போட்டு இளம் ரசிகைகள் மத்தியில் பிரபலமானவர்.

பாலியல் குற்றச்சாட்டு
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று டிவி நடிகர் பியர்ல் வி புரியை கிழக்கு வசை பகுதியில் உள்ள வாலிவ் போலீஸ் அதிரடியாக போக்சோ சத்தத்தின் கீழ் கைது செய்துள்ளார். இளம் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

சினிமா வாய்ப்பு
சினிமா மற்றும் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக சிறுமி ஒருவரை சில ஆண்டுகள் முன்னதாக இவர் சீரழித்ததாகவும், சில ஆண்டுகள் அவருடன் தொடர்பில் இருந்து விட்டு பின்னர், அவரை கழட்டி விட்டதாகவும் இவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சாமுராய் நடிகை சப்போர்ட்
இந்த விஷயம் பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி உள்ள நிலையில், சாமுராய் படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை அனிதா இவருக்கு ஆதரவாக பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. நாகினி தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த பியர்ல் வி புரி பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் அவர் அப்படி பட்ட ஆள் இல்லை இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு என அனிதா பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











