நீ அங்கே.. நான் இங்கே.. அது என்னடா 'Virtual' திருமணம்.. லாக்டவுனில் நாகினி நடிகை புதிய திட்டம்!

மும்பை: லாக்டவுன் 4.0 தொடங்கப்பட உள்ளதால், தனது திருமணத்தை Virtual திருமணமாக செய்து கொள்ள நாகினி நடிகை முடிவு செய்துள்ளார்.

Recommended Video

Actress Rithika doing household chores | Sameera reddy, Harathi, Jackline, Hansika

இந்தி டிவி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை சயந்தனி கோஷ், அனுகிரஹ் திவாரி என்பவரை காதலித்து வருகிறார்.

விஜய் டிவியில் வெளியான லேட்டஸ்ட் வெர்ஷன் மகாபாரத தொடரில் சத்யவதியாக நடித்திருந்த சயந்தனி கோஷ், நாகினி 4ம் பாகத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

சீரியல் நடிகை

சீரியல் நடிகை

35 வயதாகும் நடிகை சயந்தனி கோஷ், கும்கும் - ஏக் பியாரா சா பந்தம் சீரியலில் அறிமுகமானார். நாகின், மகாபாரதம், நாம் கரண் உள்ளிட்ட பல இந்தி டிவி சீரியலில் நடித்து தனக்கான ரசிகர்கள் வட்டத்தை அதிகரித்துள்ளார். தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நாகினி 4ம் பாகத்திலும் இவர் நடித்து வருகிறார்.

பிக்பாஸ் நடிகை

பிக்பாஸ் நடிகை

சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் நடிகை சயந்தனி கோஷுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. அதனை தொடர்ந்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களையும் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

கிராண்டா

கிராண்டா

சயந்தனி கோஷ் மற்றும் அவரது காதலரான அனுகிரஹ் திவாரி நல்லா கிராண்டா தங்களது திருமணத்தை நடத்த எண்ணியிருந்தனர். ஆனால், லாக்டவுன் 1, 2, 3 மற்றும் 4 என தொடர்ந்து கொண்டே செல்வதால் தங்கள் திருமணத்தை சிம்பிளாக செய்யவும் புது மாதிரியாக செய்துக் கொள்ளவும் இந்த ஜோடி முடிவு செய்திருக்கிறது.

வெர்ச்சுவல் திருமணம்

வெர்ச்சுவல் திருமணம்

நாகினி 4வது பாகத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகை சயந்தனி கோஷ் தனது காதலர் அனுகிரஹ் திவாரியை வீடியோ கால் போன்ற virtual முறையில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். இது புதுசா இருந்தாலும், லாக்டவுன் நேரத்தில் தங்கள் திருமணத்தை இப்படி நடத்தினால் நன்றாக இருக்கும் என இருவரும் இணைந்து ஒரு மனதாக முடிவு செய்ததாக கூறியுள்ளார்.

லாக்டவுனுக்கு பிறகு

லாக்டவுனுக்கு பிறகு

கொரோனா வைரஸ் பிரச்சனைகள் எல்லாம் முடிந்து, லாக்டவுன் முழுமையாக நீக்கப்பட்ட பின்னர், நண்பர்கள், உறவினர்கள், பிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து வைக்கவும் சயந்தனி முடிவு செய்துள்ளார். இந்தி டிவி சீரியல் நடிகையின் இந்த புதுவிதமான திருமணத்தை அறிந்த பாலிவுட் ரசிகர்கள் அதுகுறித்து பரபரப்பாக பேசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X