டிவி நடிகருக்கு கொரோனா பாதிப்பு.. 'நாகினி 5' ஷூட்டிங் திடீர் கேன்சல்.. அனைவருக்கும் டெஸ்ட்!
மும்பை: பிரபல சின்னத்திரை நடிகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, நாகினி தொடரின் படப்பிடிப்பு கேன்சல் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு
இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 842 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் 9 லட்சத்து 44 ஆயிரத்து 996 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 64 லட்சத்து 73 ஆயிரமாக உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மலைகா அரோரா
கொரோனா, பிரபலங்களுக்கும் பரவி இருக்கிறது. அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் இதன் பாதிப்புக்கு உள்ளாகி, சிகிச்சை பெற்றனர். நடிகர் விஷால், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, நிக்கி கல்ராணி, நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், நடிகையும் எம்.பியுமான சுமலதா, அர்ஜுன் கபூர், மலைகா அரோரா உள்பட பலருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டது.

சரத் மல்ஹோத்ரா
பல சின்னத்திரை நடிகர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இப்போது மற்றொரு பிரபல சின்னத்திரை நடிகரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியில் சினிமா மற்றும் டிவி தொடர்களில் நடித்து வருபவர் சரத் மல்ஹோத்ரா. டிவி தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர், இப்போது நாகினி 5 தொடரில் நடித்துவருகிறார்.

பரிசோதனை
இந்த தொடரில் வீரன்ஷூ என்ற கேரக்டரில் நடித்துவருகிறார். இவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அப்போது அவருக்கு பாசிட்டிவ் என வந்தது. இதையடுத்து வீட்டில், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் கூறும்போது, 'லேசான அறிகுறிதான். இருந்தாலும் பாசிட்டிவாக எடுத்துக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

ஷூட்டிங் நிறுத்தம்
இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து நாகினி 5 தொடரின் படப்பிடிப்பு, 3 நாகளுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. அதில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா டெஸ்ட் நடத்தப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குப் பிறகு சரத் மல்ஹோத்ரா ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











