குடித்துவிட்டு அடிக்கிறார், கொலை மிரட்டல் விடுக்கிறார்: கணவர் மீது நடிகை புகார்
மும்பை: தன் கணவர் தன்னை தாக்கியதாக நாகினி தொடரில் நடித்த அர்ஜூ கோவித்ரிகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நாகினி உள்ளிட்ட இந்தி தொடர்களில் நடித்து வருபவர் அர்ஜூ கோவித்ரிகர். அவர் கடந்த 2010ம் ஆண்டு தொழில் அதிபரான சித்தார்த் சபர்வாலை திருமணம் செய்தார்.
அவர்களுக்கு 5 வயதில் ஆஷ்மான் என்கிற மகன் உள்ளார்.

அடி உதை
மும்பை ஒர்லி பகுதி காவல் நிலையத்திற்கு சென்ற அர்ஜூ தனது கணவர் சித்தார்த் மீது புகார் அளித்துள்ளார். பல ஆண்டுகளாக சித்தார்த் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மனைவி
சித்தார்த்துக்கு குடிப்பழக்கம் உள்ளது. குடித்துவிட்டு அடிக்கடி பிரச்சனை செய்கிறார். கடந்த மாதம் 15ம் தேதி குடிப் பிரச்சனை தொடர்பாக நான் சித்தார்த்துடன் பேசினேன். அது வாக்குவாதமாக மாறியது. அவர் காலை 4 மணி அளவில் என்னை தரதரவென்று பாத்ரூமுக்கு இழுத்துச் சென்று மோசமாக அடித்தார் என்று அர்ஜூ தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பம்
சித்தார்த் தன்னை கொடுமைப்படுத்தியதுடன் மட்டும் இல்லாமல் தன் மொத்த குடும்பத்தையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார் என்று தெரிவித்துள்ள அர்ஜூ சிசிடிவி காட்சிகளை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

நாடகம்
அர்ஜூ சொல்வதில் உண்மை இல்லை. அவர் நடிக்கிறார். கிரைம் நிகழ்ச்சிக்கு ஒத்திகை பார்க்க தன்னை அறையச் சொன்னார். அவர் புகார் குறித்து உரிய இடத்தில் பார்த்துக் கொள்வேன் என்று சித்தார்த் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications