Israel War: அதிர்ச்சி.. பிரபல நாகினி நடிகையின் உறவினர்கள் இஸ்ரேல் போரில் கொடூரமாக பலி.. கதறிய நடிகை
மும்பை: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இதில், காஸா பகுதியை ஒட்டுமொத்தமாக ஆக்கிரமித்து விட்டது. தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற்ற இந்த கொடூர போரில் சுமார் 3000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், நாகினி சீரியல் நடிகையின் உறவினர்கள் இருவரை அவர்களது குழந்தைகளின் கண் முன்னே சுட்டு வீழ்த்திய கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

2023ம் ஆண்டிலும் கொரோனா உள்ளிட்ட பெரிய பாதிப்புகள் மனித உயிர்களை காவு வாங்கிய நிலையிலும், மனிதர்கள் திருந்தாமல் போர்களை கையில் எடுத்து நாடு பிடிக்கும் ஆசையில் பல உயிர்களை குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என பாராமல் கொன்று குவித்து வருவது நடைபெற்று தான் வருகிறது.
நாகினி நடிகை உறவினர்கள் பலி: நாகினி சீரியலில் நடித்து பிரபலமான இந்திய சீரியல் நடிகை மதுரா நாயக் தனது உறவுக்கார பெண்ணும் அவரது கணவரும் இஸ்ரேலில் நடந்த ஹமாஸ் தாக்குதலில் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதாக கதறி அழுது பேசிய வீடியோ தீயாக பரவி வருகிறது. அந்த இருவரையும் அவர்களது குழந்தைகளின் கண் முன்னே கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர். அந்த இழப்பால் எங்கள் குடும்பமே மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகி உள்ளது என வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பி உள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் இருந்து பிரபல பாலிவுட் நடிகை நஸ்ரத் பரூச்சா கடந்த ஞாயிற்றுக்கிழமை பத்திரமாக நாடு திரும்பிய நிலையில், நல்லவேளை உயிர் தப்பினேன் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், நாகினி சீரியலில் நடித்துள்ள நடிகையின் உறவினர்களை கொடூரமான முறையில் கொன்று குவித்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. யூதர்களை அடியோடு அழித்து ஒழிக்க வேண்டும் என்கிற வெறி பல காலங்களாக இருந்து வரும் நிலையில், தற்போது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போர் தீவிரமாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











