பிரபல டிவி தொடர்.. 'நாகினி 5' பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்.. அந்த ஹீரோயின்தான் இச்சாதாரி பாம்பா?

By

மும்பை: நாகினி தொடரின் 5 ஆம் சீசனுக்கான புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிரபல நடிகை ஒருவர் நாகினியாக நடிக்க இருக்கிறார்.

இந்தியில் சூப்பர் ஹிட்டானத் தொடர், நாகின். இது தமிழில் நாகினி என்ற பெயரில் டப் ஆகி வெளியாகிறது.

இதன் முதல் சீசனில் மௌனி ராய், அதா கான், அர்ஜுன் பிஜ்லானி, சுதா சந்திரன் ஆகியோர் முன்னணி கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

 பிடித்த பாம்பு கதை

பிடித்த பாம்பு கதை

இந்த தொடர் இந்தி தவிர மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் வெளியிடப்படுகிறது. இதற்கு வரவேற்பு அதிகம். பாம்பு கதை பெண்கள், குழந்தைகளுக்குப் மிகவும் பிடித்துப் போக தொடர்ந்து இந்த சீரியலை மக்கள் ஆர்வமாகப் பார்த்து வருகின்றனர். இதன் முதல் சீசன், தமிழில் சன் டிவியில் டப் செய்யப்பட்டு வெளியானது. ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது.

 நான்காம் பாகம்

நான்காம் பாகம்

இரண்டாம் சீசன், கலர்ஸ் டிவியில் டப் செய்யப்பட்டு வெளியானது. நாகினி 3 ஆம் சீசனும் ஒளிபரப்பான நிலையில், இப்போது நான்காவது சீசன் வெளியாகி வருகிறது. லாக்டவுன் காரணமாக இதன் ஷூட்டிங், தடைபட்டிருந்தது. நான்காவது சீசனில் நியா ஷர்மா, விஜயேந்திர குமேரியா, அனிதா ஹசனந்தனி ஆகியோர் முன்னணி கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

 லாக்டவுன் காரணமாக

லாக்டவுன் காரணமாக

இந்நிலையில் இந்தி பிக்பாஸ் 13 வது தொடர் மூலம் பிரபலமான ரஸாமி தேசாய், இந்த தொடரில் இணைந்தார். நடிகை ஜாஸ்மின் பாசின் இத் தொடரில் இருந்து விலகியதை அடுத்து அவரது கேரக்டரில், இவர் நடித்து வருகிறார். லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இதன் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் ரஸாமி தேசாய், நியா சர்மா ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

 நாகினி 5 போஸ்டர்

நாகினி 5 போஸ்டர்

நாகினி 4 தொடர் விரைவில் முடிவடைய இருக்கிறது. கொரோனா லாக்டவுன் காரணமாக இதை அவசரமாக முடிப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நாகினி 5 வது சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் இப்போது, நாகினி 5 சீசனின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. நாகினியாக நடிப்பவரின் கண்கள் மட்டும் தெரிவது போல இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Tamannah Bhatia Topless Protest | #AllLivesMatters • Kerala Pregnant Elephant • Blacks
 சரியாக வராது

சரியாக வராது

அந்த நாகினி, நடிகை ஹினா கான்தான் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். சிலர் இது ஹினாதான். ஆனால், நாகினி கேரக்டர் அவருக்கு சரியாக வராது என்று சில நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளனர். சிலர், அவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று கூறியுள்ளனர். நாகினி 4 சீசனிலேயே ஹினாகான் நாகினியாக நடிக்க வேண்டி இருந்தது. கால்ஷீட் பிரச்னையால் அது முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X