twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜகா வாங்கிய வலிமை, ஆர்ஆர்ஆர்...கெத்து காட்டி, தில்லாக களமிறங்கும் சிறிய பட்ஜெட் படங்கள்

    |

    சென்னை : பொங்கல் ரிலீசென பிரம்மாண்ட அறிவிப்பை வெளியிட்டு விட்டு, கடைசி நிமிடத்தில் ரிலீசை ஒத்திவைப்பதாக மெகா பட்ஜெட் படங்கள் பலவும் அறிவித்துள்ளன. ஆனால் சிறிய பட்ஜெட் படங்கள் பலவும் பொங்கல் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

    நாடு முழுவதும் ஒமைக்ரான் அசுர வேகத்தில் பரவி வருகிறது. கொரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத அளவில் உச்சம் தொட்டு வருகிறது. சினிமா பிரபலங்கள் பலருக்கும் தினமும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இவர்களில் சத்யராஜ், டைரக்டர் பிரியதர்ஷன், டி.பி.கஜேந்திரன் உள்ளிட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஷெரினுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு...விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை ஷெரினுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு...விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை

    100 கோடி வசூலித்த படங்கள்

    100 கோடி வசூலித்த படங்கள்

    கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை. பல படங்களின் ஷுட்டிங்கும் தாமதமாகி வந்தது. 2021 ம் ஆண்டின் துவக்கத்தில் விஜய்யின் மாஸ்டர், மத்தியில் சிவகார்த்திகேயனின் டாக்டர், ஆண்டு இறுதியில் தீபாவளிக்கு அண்ணாத்த, அதைத் தொடர்ந்து சிம்புவின் மாநாடு படங்கள் மட்டுமே தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டு, 100 கோடி வசூலை கடந்தன.

    பிரம்மாண்ட ரிலீஸ் ஏற்பாடு

    பிரம்மாண்ட ரிலீஸ் ஏற்பாடு

    2021 ல் மார்ச் மாதத்தில் தான் கொரோனா பரவல் அதிகரித்தது. ஆனால் 2022 ம் ஆண்டின் துவக்கத்திலேயே கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் செய்ய பல படங்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்தன. ஜனவரி 7 ல் ஆர்ஆர்ஆர், ஜனவரி 13 ல் வலிமை, ஜனவரி 14 ல் ராதே ஷ்யாம் என மெகா பட்ஜெட் படங்கள் ரிலீஸ் செய்ய பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

    ஜகா வாங்கிய மெகா படங்கள்

    ஜகா வாங்கிய மெகா படங்கள்

    ஆனால் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பின் காரணமாக தியேட்டர்களில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என அரசு உத்தரவிட்டது. பல மாநிலங்களில் தியேட்டர்கள் முற்றிலுமாக மூடப்பட்டன. இதன் காரணமாக படங்களின் ரிலீசை ஒத்திவைப்பதாக அடுத்தடுத்து அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டன. பெரிய பட்ஜெட் படங்கள் ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில், சிறிய பட்ஜெட் படங்கள் பலவும் துணிச்சலாக பொங்கல் அன்று படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்து வருகின்றன.

    கெத்து காட்டும் சிறிய படங்கள்

    கெத்து காட்டும் சிறிய படங்கள்

    விஷாலின் வீரமே வாகை சூடும் படம் ஜனவரி 14 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் காமெடியன் சதீஷ் ஹீரோவாக அறிமுகமாகும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், பாண்டியராஜனின் மகன் ப்ருத்விராஜன் லீட் ரோலில் நடித்துள்ள மருத ஆகிய படங்கள் ஜனவரி 13 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இவர்கள் முடிவு சரியா

    இவர்கள் முடிவு சரியா

    இது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இவர்களின் இந்த துணிச்சலான முடிவை பலரும் பாராட்டினாலும், ஜனவரி 10 ம் தேதிக்கு பிறகு அரசு எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கும், புதிதாக என்னவெல்லாம் கட்டுப்பாடுகள் வர போகிறது என தெரியாமல் பொங்கல் ரிலீஸ் என போஸ்டர்கள் வெளியிட்டு வருகிறார்களே என வேதனை தெரிவித்து வருகிறார்கள்.

    English summary
    Due to high increase of omicron cases, Valimai, RRR,Radhe shyam movies announced about the postponement of theatrical release. But small budget movies like naai sekar returns, marudha, veeramae vaagai soodum movies confirmed pongal release on theatres.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X