நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் பூஜையுடன் துவக்கம்... புகைப்படம் வெளியிட்ட படக்குழு!

சென்னை : நடிகர் வடிவேலு ஹீரோவாக நடிக்கும் படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.

இந்தப் படத்தின் பூஜை இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில் இந்த பூஜையின் படத்தை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு

தன்னுடைய காமெடி கலாட்டக்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் வடிவேலு. கடந்த காலங்களில் இவரது காமெடி இல்லாத படங்களே இல்லை என்ற அளவிற்கு இவரது நடிப்பு இருந்தது. வித்தியாசமான கோணங்கள், விதவிதமான சேட்டைகள் உள்ளிட்டவற்றை தன்னுடைய காமெடியில் கலந்து ரசிகர்களை குஷி ஆக்கினார் வடிவேலு.

நடிப்பிலிருந்து விலகிய வடிவேலு

நடிப்பிலிருந்து விலகிய வடிவேலு

இந்நிலையில் இவர் கடந்த சில வருடங்களாக நடிப்பிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டிருந்தார். இதனிடையே சினிமாவில் தன்னுடைய re-entryய தற்போது இவர் துவங்கியுள்ளார். அடுத்தடுத்து கதைகளை கேட்டு வருகிறார்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம்

இதனிடையே தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் இவர் கமிட் ஆகியுள்ளார். இந்தப் படத்தில் நாயகனாக இவர் நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.

மோஷன் போஸ்டர் வெளியீடு

மோஷன் போஸ்டர் வெளியீடு

மேலும் படத்தின் மோஷன் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது. மிகவும் சிறப்பான வகையில் இந்த போஸ்டர் அமைந்திருந்தது. வடிவேலு ரசிகர்களுக்கு ட்ரீட் ஆகவும் இந்த போஸ்டர் இருந்தது.

பூஜையுடன் துவக்கம்

பூஜையுடன் துவக்கம்

பூஜையுடன் இந்த படம் துவங்கப்பட்டுள்ள நிலையில் அந்தப் பூஜையின் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் வடிவேலு, சிவாங்கி உள்ளிட்டவர்கள் காணப்படுகின்றனர். மேலும் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளார்.

சுராஜ் இயக்கம்

சுராஜ் இயக்கம்

படத்தை சுராஜ் இயக்கவுள்ளார். முன்னதாக கடந்த 2006ல் சுராஜ் இயக்கத்தில் வெளியான தலைநகரம் என்ற படத்தில் நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் சுராஜ் உடன் மீண்டும் இணைந்துள்ளார் வடிவேலு.

Recommended Video

Sivakarthikeyan Speech | Naai Sekar Title Issue | Vadivelu | Sathish | Filmibeat Tamil
லைகா தயாரிப்பு

லைகா தயாரிப்பு

லைகா புரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டிருந்தது. படத்தின் துவக்கமே ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் ஆகியவற்றுடன் துவங்கியுள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X