நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்!

By Shankar

அருள் நிதி நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்.

நாயகியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். என்.ஜே.ஸ்ரீகிருஷ்ணா என்ற புதுமுக இயக்குனர் இந்தப் படத்தை இயக்குகிறார். இது முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிறது. படத்தை ஜே.எஸ்.கே.பிலிம் கார்பரேஷனும், லியோ விஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

புது தலைப்பு

புது தலைப்பு

படம் குறித்து தயாரிப்பாளர் லியோ விசன் ராஜ் குமார் கூறுகையில், "சிந்தனையை தூண்டும், குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் நகைசுவை சித்திரமான இந்த படத்தின் தலைப்பே கதை சொல்லும். 'நல்ல பொருத்தமான தலைப்பே படத்தின் வெற்றியை 50 சதவீதம் தீர்மானிக்கும். 'நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும் இதுவரை கேட்டிராத, பார்த்திராத ஒரு புதிய கதையாகும்.

புது இயக்குநர்

புது இயக்குநர்

புதிய இயக்குனர் ஸ்ரீ கிருஷ்ணா இந்த கதையை சொல்லும் போதே இதை தயாரிக்க வேண்டும் என்று உடனடியாக முடிவு செய்து விட்டேன். மாதிரி கிராமமாக திகழும் ஒரு கிராமமும், அந்த ஒழுக்கம் தங்களக்கு அசௌகரியம் தருகிறது என கருதும் நாலு போலீசையும் பற்றிய கதை தான் 'நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்'.

நகைச்சுவை

நகைச்சுவை

இந்த கதை ஓட்டத்தை குலுங்க வைக்கும் நகைச்சுவை மூலம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் படமாக்கி இருக்கிறோம்.

ரம்யா நம்பீசன்

ரம்யா நம்பீசன்

அருள் நிதி நாயகனாக நடிக்க அவருக்கு இணையாக நடித்து இருப்பவர் ரம்யா நம்பீசன். சிங்கம் புலி மற்றும் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' புகழ் பகவதி பெருமாள் தங்களது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை நிச்சயம் கவர்வார்கள் என நம்புகிறோம்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X