பாட்டுக்கு ராயல்டி கேட்ட இளையராஜா.. சீமான் என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா கூலி திரைப்படத்தில் தன்னுடைய பாடலை அனுமதி இல்லாமல் பயன்படுத்தி இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கும் நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், முன்பு வானொலியில் பாட்டை ஒலிபரப்ப வேண்டும் என்றால், ராயல்டி வழங்கப்பட்டது. ஆனால், இப்போது அது வழங்கப்படுவது இல்லை, என்பதால் அதை அவர் கேட்கிறார் என்றார்.
இந்நிலையில், அண்ணா நகரில் தனியார் ஊடக நிறுவன அலுவலக திறப்பு விழாவில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்கள், இளையராஜா ராயல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த திரைப்படங்கள் எல்லாம் முன்னர் மாதிரி இல்லை. ஒரு முறை படத்தை தொலைக்காட்சிக்கு கொடுத்துவிட்டால் பல ஆண்டுகளுக்கு உரிமம் வைத்து கொள்வார்கள். தயாரிப்பாளருக்கும், படைப்பாளருக்கும் தொகையாக ஒன்றும் செல்வது கிடையாது.

7 லட்சம் சம்பளம்: தம்பி படத்திற்கு எனக்கு 7 லட்சம் சம்பளம் கொடுத்தார்கள். ஆனால், அந்த படத்தை எத்தனை முறை ஒளிபரப்பி இருப்பார்கள். ஒவ்வொரு முறை ஒளிபரப்பிய போதும், அந்த காசு யாருக்கு செல்கிறது. படைப்பாளிக்கும் இல்லை, தயாரிப்பாளர்களுக்கும் இல்லை. இதனால் தான் இளையராஜா இப்படி கேட்கிறார். அவர் பாடலாசிரியருக்கு கொடுக்காதீர்கள்... தயாரிப்பாளருக்கு கொடுக்காதீர்கள் என்று சொல்லவில்லை. எனக்கு கொடுங்கள் என்று கேட்கிறார்.
இளையராஜாவிற்கு பேராசை: முதல் மரியாதை படத்திற்கு இளையராஜாவிற்கு இரண்டு லட்சம் சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால், அந்த படம் ஓடுமா? ஓடாதா? என்று தெரியவில்லை என்பதால், அந்த சம்பளத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அந்த பாடல் எத்தனை முறை ஒளிபரப்படுகிறது. அதில் அந்த படைப்பாளிக்கு எதாவது பங்கு இருக்கா. முன்பெல்லாம், வானொலியில் பாட்டை ஒலிபரப்ப வேண்டும் என்றால், ராயல்டி வழங்கப்பட்டது. ஆனால், இப்போது அது வழங்கப்படவில்லை என்பதால் அதை அவர் கேட்கிறார். அதை தவறாக அர்த்தம் புரிந்து கொண்டவர்கள் இளையராஜா பேராசையில் பணம் கேட்கிறார் என்று நினைக்கிறார்கள் என சீமான் கூறியுள்ளார். இந்த அலுவலக திறப்பு நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, நடிகர்கள் அமீர், தம்பி ராமையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரஜினிகாந்தின் கூலி: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கூலி திரைப்படத்தின் டீசரில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தங்க மகன் திரைப்படத்தில் இடம் பெற்ற, "வா வா பக்கம் வா" என்ற பாடலின் இசை பயன்படுத்தப்பட்டு இருந்தது. இதை பார்த்த இளையராஜா தான் இசையமைத்த வா வா பக்கம் வா என்ற பாடலுக்கு அனுமதியை தன்னிடம் வாங்காமலேயே இந்த பாடலை எப்படி பயன்படுத்தலாம்? என்று கூலி திரைப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











