கதையதான சுடுவாங்க... இதையுமா சுட்டுட்டாய்ங்க... சினிமா டீம் ஷாக்

By

சென்னை: தங்கள் படத்தின் பின்னணி இசையை திருடி, டிவி.சீரியலில் பயன்படுத்தியதாக, படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சினிமா பிளாட்பார்ம் என்ற நிறுவனம் சார்பில் வி.டி.ரித்திஷ்குமார் தயாரித்துள்ள படம், நான் அவளை சந்தித்த போது. இதில் சந்தோஷ் பிரதாப் ஹீரோவாக நடிக்கிறார். இவர் பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்தவர்.

நாயகியாக சாந்தினி நடிக்கிறார். மலையாள நடிகர் இன்னசன்ட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் ஜி.எம்.குமார், சுஜாதா, கோவிந்தமூர்த்தி, சாம்ஸ், டி.பி.கஜேந்திரன், சாந்தி வில்லியம்ஸ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

வரும் 27 ரிலீஸ்

வரும் 27 ரிலீஸ்

எல்.ஜி.ரவிசந்தர், இந்தப் படத்தை இயக்குகிறார். இவர், மாசாணி, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படங்களை இயக்கியவர். ஆர்.எஸ்.செல்வா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹித்தேஷ் முருகவேல் இசை அமைத்துள்ளார். இந்தப்படம் வரும் 27 ஆம் தேதி வெளியாகிறது.

பின்னணி இசை

பின்னணி இசை

இதற்கிடையே இந்த படத்தின் பின்னணி இசையை திருடி, பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து வெளிவரும் டி.வி.சீரியலில் பயன்படுத்திவிட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.

டி.வி.சீரியல்

டி.வி.சீரியல்


இதுபற்றி படக்குழுவிடம் விசாரித்தபோது, இந்தப் படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள், கோடம்பாக்கத்தில் உள்ள ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் நடந்தது. அங்கு சில சீரியல்களுக்கான வேலைகளும் நடந்து வருகின்றன.

அங்கு எங்களின் பின்னணி இசையை அப்படியே திருடி, பிரபல சேனலில் வெளியாகும் கிராமத்துக் கதையை கொண்ட சீரியலுக்குப் பயன்படுத்திவிட்டனர்.

கமிஷனர் அலுவலகத்தில் புகார்

கமிஷனர் அலுவலகத்தில் புகார்

இதுபற்றி கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளோம். கமிஷனர் இன்று இல்லாததால், அவரது அலுவலகத்தில் நாளை புகார் கொடுக்க இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.

More from Filmibeat

Read more about: movie music இசை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X