'சூது கவ்வும்' இந்தி ரீமேக் … 'நான் ஈ' சுதீப் நடிக்கிறார்

By Mayura Akilan

'சூது கவ்வும்' படத்தின் இந்தி ரீமேக் படத்தில் நான் ஈ வில்லன் சுதீப் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராகிறார் இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநர் ரோஹித் ஷெட்டி.

விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, சிம்ஹா மற்றும் பலர் நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கிய படம் 'சூது கவ்வும்'. சி.வி.குமார் தயாரித்திருந்தார்.

வித்தியாசமான கதைக்களம் மூலம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது இப்படம். இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமைக்கு யு.டிவி, ஃபாக்ஸ் ஸ்டார், இண்டிமால் இந்தியா உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் போட்டியிட்டன.

அருண் பாண்டியன் வசம்

அருண் பாண்டியன் வசம்

ஆனால், நடிகர் அருண் பாண்டியன் இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை தன்வசமாக்கினார். இந்தி ரீமேக்கில் யார் நடிக்க, யார் இயக்குவார் என்ற கேள்வி எழுந்தது.

இந்தி ரீமேக்

இந்தி ரீமேக்

இந்நிலையில் தற்போது இந்தி திரையுலகின் மிக முக்கியமான இயக்குநரான ரோஹித் ஷெட்டி, கன்னட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் அருண் பாண்டியன் மூவரும் இணைந்து 'சூது கவ்வும்' படத்தின் இந்தி ரீமேக்கை தயாரிக்கவிருக்கிறார்கள்.

ரோஹித் ஷெட்டி

ரோஹித் ஷெட்டி

100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த படங்களின் பட்டியலில் அதிகமான படங்களை இயக்கியவர் ரோஹித் ஷெட்டி. தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'சூது கவ்வும்' படத்தின் இந்தி ரீமேக் மூலம் தயாரிப்பாளராகிறார்.

சுதீப் - இம்ரான்கான்

சுதீப் - இம்ரான்கான்

விஜய் சேதுபதி நடித்த பாத்திரத்தில், கன்ன ட நடிகர் சுதீப் நடிக்கவிருக்கிறார். இம்ரான் கான், ஷரதா தாஸ் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்களாம்.

'சூது கவ்வும்' படத்தின் இந்தி ரீமேக் இயக்கும் பொறுப்பை தற்போது ‘சக் தே இந்தியா' இயக்குநர் ஷமித் அமித் ஏற்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

புதிய மாற்றங்கள்

புதிய மாற்றங்கள்

படத்தின் இடைவேளைக்குப் பிறகுள்ள காட்சிகளை இந்திக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். அடுத்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

அஜய் தேவ்கான் நடிப்பில் 'சிங்கம் 2' படத்தினை இயக்கவிருக்கிறார் ரோஹித் ஷெட்டி. அதனைத் தொடர்ந்து ஷாருக்கான் நடிக்கும் படத்தினை இயக்குமாறு கேட்டிருக்கிறார்கள். இதனால் தான் 'சூது கவ்வும்' படத்தின் ரீமேக்கை இயக்காமல் தயாரிக்க மட்டும் திட்டமிட்டு இருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X