Robin Hood Trailer: ஜனநாயகன் இயக்குநரே பாராட்டிட்டாரே..மொட்டை ராஜேந்திரன் ராபின்ஹுட் டிரைலர் ரிலீஸ்!

சென்னை: LUMIERES STUDIOS நிறுவனம் சார்பில், ஜூட் மீனே, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில், முதல் முறையாக நடிகர் மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடிக்க, 1980 களின் கிராமப்புற பின்னணியில், கலக்கலான காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் "ராபின்ஹீட்". தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் H வினோத் இப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டு, படக்குழுவை பாராட்டியுள்ளார்.

படத்தின் டிரெய்லரைப் பார்த்த இயக்குநர் H.வினோத் , படத்தின் பின்னணி, விஷுவல்கள் பிரமாதமாக உள்ளது. காமெடி அருமையாக உள்ளது. இசை படத்திற்கு பொருத்தமாக அமைந்துள்ளது. டிரெய்லர் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார். ஹெச். வினோத் தற்போது விஜய்யை வைத்து உருவாக்கி உள்ள ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் பணிகளில் பிசியாக உள்ளார்.

Naan Kadavul Mottai Rajendran Started Robinhood Trailer Release It Receives Good Reviews

ராபின் ஹுட் படத்தை பொறுத்தவரையில், 1980 களில், கிராமத்தில் ஒரு லாட்டரி சீட்டில் பெரிய பரிசு விழ, அந்த பரிசுக்காக இருவருக்கு இடையே நிகழும் போட்டியும், பிரச்சனைகளும் தான் இப்படத்தின் மையம். நாம் மறந்து போன லாட்டரி சீட்டு காலத்தை, கிராமப்புற பின்னணியில் மீட்டெடுத்து , கலகலப்பான திரைக்கதையுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் எண்டர்டெயினராக இப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் கார்த்திக் பழனியப்பன்.

டிரைலர்க்கு வரவேற்பு: இன்று அதாவது நவம்பர் 14ஆம் தேதி வெளியாகியிருக்கும் டிரெய்லர், 1980 களின் காலகட்டத்தை திரையில் பார்க்கும் குதூகலத்தை தருவதோடு, வயிறு வலிக்க சிரிக்க வைக்கும், ஒரு கலக்கலான எண்டர்டெயினராக இப்படம் இருக்கும் என்பதை, உறுதி செய்கிறது. இப்படத்தில் நடிகர் மொட்டை ராஜேந்திரன் முதல் முறையாக நாயகனாக களமிறங்கியுள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் மறைந்த RNR மனோகர் நடித்துள்ளார். இவர்களுடன் KPY சதீஷ், அம்மு அபிராமி, சங்கிலி முருகன், முல்லை மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

Naan Kadavul Rajendran Started Robinhood Trailer Release It Receives Good Reviews

விரைவில் ரிலீஸ்: இப்படத்தின் படப்பிடிப்பு அருப்புக்கோட்டை, காரியாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. படத்திற்கு ஸ்ரீநாத் விஜய் இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X