ஒரே குத்து... பேஸ்புக்கில் வந்து பயமுறுத்தும் 'நான் கடவுள்' ராஜேந்திரன்!

By Sudha

சென்னை: நான் கடவுள் ராஜேந்திரனைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. செமையான டெரர் வில்லனைத்தான் இயக்குநர் பாலா தமிழ் சினிமாவுக்குக் கொடுத்துள்ளார்.

இந்த ராஜேந்திரன் நேற்று முதல் பேஸ்புக்கிலும் குடித்தனம் புகுந்துள்ளார். எடுத்த எடுப்பிலேயே தனது முரட்டு உடலைக் கவர் படமாக போட்டும் பீதியைக் கிளப்பியுள்ளார்.

இன்று இன்னொரு பயமுறுத்தல் படத்தைப் போட்டுள்ளார். ஒரே குத்து என்று அதற்கு முரட்டுத்தனமான தலைப்பு வேறு...

பயப்படாம வாங்க.. ராஜேந்திரன் பேஜைப் போய் பார்த்துட்டு வருவோம்

பைசெப்ஸ் கவர்...

பைசெப்ஸ் கவர்...

ராஜேந்திரனின் பேஸ்புக் பக்கத்தில், கவர் படமே டெரர் படமாக இருக்கிறது. பேக் ஷாட்டில் உள்ள ராஜேந்திரனின் சட்டை போடாத உடம்பைப் படமாக்கி போட்டுள்ளனர். முரட்டுத்தனமான ஆர்ம்ஸ் என்ன... பிரமாதம்... மொட்டைத் தலை என்ன.. பிரமாதம். கவர் படத்துக்காகவே போஸ் கொடுத்து எடுத்துப் போட்டது போலவே பிரமை...

ஒரே குத்து...

ஒரே குத்து...

இன்று ஒரு படத்தை போஸ்ட் செய்துள்ளார் ராஜேந்திரன். அதில் ஒரு கத்தியை கையில் பிடித்துக் குத்துவது போல போஸ் தருகிறார்.. வழக்கம் போல உடம்பில் சட்டையைக் காணோம்.. ஒரே குத்து என்று இதற்கு தலைப்பு.

Reached 5000 likes ba!!

Reached 5000 likes ba!!

அப்புறம், இந்த செய்தியை எழுதுவதற்கு 16 மணி நேரத்திற்கு முன்பு ஒரு போஸ்ட் போட்டுள்ளார். தனது படத்தைப் போட்டு மேலே ரீச்ட் 5000 லைக் பா என்று தனது பாணியில் வார்த்தைகளை கோர்த்துள்ளார்.

தம்பிகளா இன்னும் என்ன பா பண்றீங்க...

தம்பிகளா இன்னும் என்ன பா பண்றீங்க...

அதே 16 மணி நேரத்திற்கு முன்னாடி இன்னொரு போஸ்ட்டும்.. அதில் முரட்டுத்தனமான ஒரு சிலம்பக் குச்சியை முதுகுக்குப் பின்னால் அண்டக்கொடுத்தபடி விரட்டு லுக் விடுகிறார் ராஜேந்திரன். அதற்கு தலைப்பு என்னன்னா... தம்பிகளா இன்னும் என்னபா பண்றீங்க.. போய் தூங்குக்கப்பா..

ஒனிடா டிவி மண்டையன்

ஒனிடா டிவி மண்டையன்

இந்த பேஸ்புக் பக்கத்தில் ஒரு ரசிகர் ராஜேந்திரனை ஓனிடா டிவி மண்டையன் என்று செல்லமாக வர்ணித்துள்ளார். அதற்கு சிலர் லைக் கொடுத்து சந்தோஷித்துள்ளனர்.

ஹவ் மெனி லைக்ஸ்...

ஹவ் மெனி லைக்ஸ்...

பிறகு இன்னொரு படம். மகா கொடூரமான பார்வையுடன் ஒரு டெரர் போஸ்.. அதற்கு மேலே ஹவ் மெனி லைக்ஸ் என்று ஆங்கிலத்தில் கேட்டுள்ளார் கடவுள்....

நல்லாருக்குபா...

நல்லாருக்குபா...

கவர்ச்சிகரமான போஸ்ட்கள், கலகலப்பு பன்ச் டயலாக்குகள், வறட்டுத்தனமான சிந்தனைகள்.. இப்படி ஏடாகூடமாகவே தெரியும் பேஸ்புக் பக்கங்களுக்கு மத்தியில் ராஜேந்திரனின் பேஸ்புக் பக்கம் ஜிலீர்னுதான் இருக்கு...

நல்லாருக்குபா...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X