மெலடிக்கு எப்பவுமே நம்ம மக்கள் ஆதரவு இருக்கும்... ஒரு கோடி பார்வைகளை கடந்த நான் பிழை பாடல்
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
இந்தப் படத்தின் 3 பாடல்கள் இதுவரை வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளன.

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்
நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இந்தப் படத்தில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர்.

2வது முறையாக கூட்டணி
முதல் படமான நானும் ரவுடிதான் படம் சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலை காணப்படுகிறது. ரவுடி பிக்சர்சின் சமீபத்திய வெளியீடான ராக்கி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்தப் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

3 பாடல்கள் வெளியீடு
தன்னுடைய சொந்த பேனரில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இந்தப் படத்தின்மூலம் இணைந்துள்ளனர். இதனிடையே இந்தப் படத்தில் அனிருத் இசையில் 3 பாடல்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. முதல் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.

சிறப்பான நான் பிழை பாடல்
இந்நிலையில் சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் மெலடி நம்பரான நான் பிழை என்ற பாடல் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. காதலை கண்ணியமாக சொல்லும் பாடலாக இந்தப் பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இடையிலான கெமிஸ்ட்ரி மிகவும் அழகாக உள்ளது.

ஒரு கோடி பார்வைகள்
இந்நிலையில் இந்தப் பாடல் யூடியூபில் 1 கோடி வியூக்களை பெற்றுள்ளது. மேலும் யூடியூபில் ரசிகர்களின் ஆதரவுடன் 4வது இடத்தில் இந்தப் பாடல் காணப்படுகிறது. இந்தப் படத்தை இயக்கியுள்ள விக்னேஷ் சிவனே இந்தப் பாடலின் வரிகளையும் எழுதியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

ரவுடி பிக்சர்ஸ் நன்றி
இந்த பாடலின் வரிகளை அவர் நயன்தாராவை மனதில் வைத்து எழுதியுள்ளாரோ என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அந்த அளவிற்கு நயன்தாராவிற்காக இந்தப் பாடல் எழுதப்பட்டுள்ளதாக உள்ளது. இந்நிலையில் இந்தப் பாடலுக்கு ரசிகர்களின் ஆதரவிற்கு ரவுடி பிக்சர்ஸ் நன்றி தெரிவித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











