நான் சிரித்தால் ஃபர்ஸ்ட் லுக் - ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு ஹாட்ரிக் ஹிட் கிடைக்குமா?
சென்னை: ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் மூன்றாவது படமான நான் சிரித்தால் படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகியுள்ளது. அறிமுக இயக்குநர் இராணா இயக்கத்தில், சுந்தர்.சி தயாரிப்பில் உருவாகும் படம் நான் சிரித்தால். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஹிப் ஹாப் தமிழா ஆதி தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதே நேரத்தில் அந்த பர்ஸ்ட் லுக்கை ரஜினிகாந்தும் வெளியிட்டு இருந்தார்.
சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இதற்கு முன்பே இரு படங்களில் நடித்துள்ளார். மீசைய முறுக்கு மற்றும் நட்பே துணை ஆகியவை. மீசைய முறுக்கு படத்தை தானே இயக்கி நடித்ததோடு, அப்படத்திற்கு இசையும் அமைத்து இருந்தார் ஹிப் ஹாப் தமிழா ஆதி.

அந்த படம் அவரின் வாழ்க்கையை வைத்தே, அதில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படயாய் கொண்டு கொஞ்சம் கமர்சியலாக அந்த படத்தை இயக்கி இருந்தார். அதற்கு பின் பார்த்திபன் தேசிங்கு என்ற அறிமுக இயக்குனர் மூலம் நட்பே துணை இயக்கபட்டது.
அந்த படத்திற்கும் இயக்க மேற்பார்வை ஹிப் ஹாப் தமிழா ஆதியே செய்து இருந்தார். தற்போது சுந்தர்.சி மற்றும் ஆதி கூட்டனியில் உருவாகும் இப்படத்திற்கு நான் சிரித்தால் என்ற தலைப்பு வைக்க பட்டிருக்கிறது. இந்த படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் பற்றிய தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என ஆதி தெரிவித்துள்ளார்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் அறிமுக இயக்குநர் இராணா இயக்கத்தில், சுந்தர்.சி தயாரிப்பில் உருவாகும் புதிய பட பர்ஸ்ட் லுக்கை ஹிப் ஹாப் தமிழா ஆதி தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதே நேரத்தில் அந்த பர்ஸ்ட் லுக்கை ரஜினிகாந்தும் வெளியிட்டு இருந்தார். ரஜினி பர்ஸ்ட் லுக்கை வெளியிடும் சமயத்தில் இப்பட இயக்குனர் இராணா அவருடன் இருந்தார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே ஆன் ஏ ஹாட்ரிக் என்றும் தெரிவித்து இருந்தார். அதை பார்க்கும் போது இந்த படமும் வெற்றி பெற்று தொடர் மூன்று வெற்றிகளை பெற்றுத் தரும் என ஆதி நம்பிக்கையுடன் உள்ளார் என்று தெரிகிறது.
பண்முக தன்மை கொண்ட ஹிப் ஹாப் தமிழா ஆதி, கடைசியாக தமிழி என்ற ஆவன குறும் படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் தொல் தமிழ் பற்றிய ஆய்வும் செய்யப்பட்டு இருந்தது. தமிழ் மொழி மீது அதிக பற்றுடைய ஆதி தமிழுக்காக ஆல்பம் பாடல்களையும் ஆவண படங்களையும் எடுத்து வருவது பலரிடமும் அவருக்கு பாரட்டுக்களை பெற்று தந்துள்ளது.


Click it and Unblock the Notifications











